றியோ: இறுதிவரை மிக ஆர்வமாக இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் முதல் 90 நிமிடங்களும், அதனைத் தொடர்ந்த மேலதிக 30 நிமிடங்களிலும் நெதர்லாந்து மற்றும் கொஸ்டாரிகா அணிகள் கோல் எதுவும் போடாத நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது.
பெனால்டி உதைக்குச் சென்ற போட்டியில் 4:3 எனும் அடிப்படையில் நெதர்லாந்து வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறது. அரையிறதிப்போட்டியில் ஆர்ஜன்டீனாவைச் சந்திக்கிறது நெதர்லாந்து.
நெதர்லாந்தின் கோல் காப்பாளர் சிறப்பாக இரு பெனால்டி உதைகளை தடுக்கியதன் காரணமாக நெதர்லாந்து வெற்றி பெற்றது.
Published by


Leave a comment