பிரேசிலியா: உலகக் கிண்ணப் போட்டியின் கால் இறுதிச் சுற்றின் 3வது போட்டியில் பெல்ஜியம் அணியை 1:0 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஆர்ஜன்டீனா அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி இருக்கின்றது. போட்டியின் 8வது நிமிடத்தில் ஹிகுயன் கோலொன்றை ஆர்ஜன்டீனாவுக்குப் பெற்றுக் கொடுத்தார்.
ஆர்ஜன்டீனாவின் முன்னணி வீரர் டீ மரியோ காயம் காரணமாக போட்டி ஆரம்பித்த நில நிமிடங்களில் வெளியேறினார். பெல்ஜியம் சிறப்பாக விளையாடினாலும், கோல் போடும் வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டன.
1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆர்ஜன்டீனா அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment