மக்கா: ‘உலகில் தற்பொழுது ஏற்பட்டுவரும் குழுக்களுக்கிடையிலான பிரிவினைவாத்தால் உலகம் இரத்த வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது. இந்நிலையிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்’ என புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் ஷரீஃபின் சிரேஷ்ட இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஷ் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுல் ஹரமில் இடம் பெற்ற ரமழான் ஜூம்ஆ பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ‘உலகில் கொலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. புனித ரமழானில் இந்த குழுவாதங்களுக்கு எதிராக நோன்பிருந்து, அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்’. என உருக்கமாக மக்களைக் கேட்டிருந்தார். குறிப்பாக சிரியா மற்றும் பலஸ்தீன் நிலவரங்களைச் சுட்டிக்காட்டினார்.
கண்ணீருடன் கணீரெனெ இருந்த இமாம் சுதைஷின் ஜூம்ஆ உரை, மக்களின் இதயங்களைத் தொட்டு, கண்களைக் குளமாக்கின.
பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஜூம்ஆவிற்கு ஒரு மில்லியன் மக்கள் சமூகமளித்திருந்தனர்.
மதீனாவிலும் இதே கருத்திற்கமையவே ஜூம்ஆ இடம்பெற்றது. மஸ்ஜிதுல் நபவியில் ஐந்து இலட்சம் மக்கள் ஜூம்ஆவில் கலந்துகொண்டிருந்தனர். அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment