லண்டன்: விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொள்வதே தனது லட்சியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார் இங்கிலாந்து பெண் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியலே யாட். வங்கதேசத்தில் இவ்வாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ செய்யும் வகையில் கோஹ்லி 44 பந்துகளில் 72 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியல்லே யாட், அன்றே தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கோஹ்லி என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று டிவிட் செய்திருந்தார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட், தனது அணிக்காக 32 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 50 இருபது 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே, இதை ஏதோ ‘ஜாலி’யாக செய்திருப்பார் என்றுதான் பலர் நினைத்திருந்தனர். ஆனால் அம்மணி உண்மையிலேயே ஆழ் மனதில் அந்த எண்ணித்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, ஜூலை 1 முதல் 3ம்தேதி வரை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்துக்கே சென்ற டேனியலே, அங்கு கோஹ்லியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த படத்தை டிவிட்டரிலும் வெளியிட்டுள்ள வீராங்கனையின் சகோதரர் மேக்ஸ், ‘இவர்கள் ஒரு சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ஹா..ஹா..’ என்று டிவிட் செய்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட். 2 2 வயதேயான கவர்ச்சி வீராங்கனை.
கோஹ்லி மீது வைத்திருக்கும் அதிக அன்பினால்தான் இத்தகைய சந்திப்புக்கள் இடம்பெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையில் இன்னும் போட்டி இடம்பெறவில்லை. போட்டி ஆரம்பித்தால் இன்னும் இன்னும் பல சீன்களை மைதானத்தில் காண முடியும் என்பதாகவும் பலர் வைத்தகண் வாங்காமல் உள்ளனர்.
Published by



Leave a comment