Category: Your Kattankudy
-
சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 13 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான், ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எஸ்.எப்.ஆர்.டி செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில்
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் அடக்கி வாசித்தல் அறிவு!
முந்திக் கொண்டு நாமே முஸ்லிம் சமூகத்தை அரசியல் பலிக்கடாவாக தாரை வார்ப்பது வரலாறாகிவிட்டது!! முஸ்லிம் சமூகத்தை சோதனைக் குள்ளாக்கி பலிக்கடாவாக்கும் அரசியலினை சாதனைகளாக கூறி சாணக்கியம் பேசுவதில் இருந்து முஸ்லிம் அரசியல் குழுக்கள் தவிர்ந்து கொள்தல் வேண்டும்,
-
நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) 2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
-
தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு 03 வருட சிறை
கொழும்பு: தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அரசாங்க ஊழியர்களை ஆகக்கூடியது 03 வருடங்களுக்கு சிறையில் அடைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வழங்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற் கமையவே தேர்தல்கள் ஆணையாளருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.
-
‘பிரதமர் வேட்பாளாராக’ மஹிந்த போட்டி
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.ஆனால் எந்தக் கட்சி அல்லது கூட்டணியின் சார்பில் அவர் போட்டியிடுவார் என்பது எதிர்வரும் செவ்வாய்கிழமைதான் முடிவாகும் என்பதாக அவரது நெருங்கிய விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஜிஹாத்தும் தற்கொலைத் தாக்குதல்களும்
– முஹம்மது நியாஸ் இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் இறைவனால் ஏவப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வழிகாட்டப்பட்ட எந்தவொரு நற்செயலை நாம் எடுத்துக்கொண்டாலும் அந்த நற்செயலை செயற்படுத்துவதற்காக நாம் பிரயோகிக்கின்ற வழிமுறைகளும் செயற்பாடுகளும் நேர்வழியிலும் அழ்ழாஹ் அனுமதித்த, அங்கீகரித்ததன் பிரகாரமும் இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாகும்.
-
கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்
– அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி டோஹா: கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQ வின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 26-06-2015ம் திகதி ஜம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் MMM.உவைஷ் (பலாஹி) அவர்களின் தலைமையில் ரய்யான் ஷெய்ஹ் இப்ராஹீம் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவு பேணும் மாபெரும் இப்தார் நோன்பு நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவு பேணும் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28-06-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
-
கஞ்சா கடத்திய இருவர் கைது!
கல்முனை: கஞ்சா கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட போது கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரைப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 506 கிராம் கேரளக்கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட 200 கிராம் உள்ளூர்க் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
-
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் செயற்குழு உறுபினர்களுடனான விஷேட கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று நடாத்தியது. இக் கலந்துரையாடல் நிகழ்வு NFGGயின் தலைமைத்துவசபை அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.