காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவு பேணும் மாபெரும் இப்தார் நோன்பு நிகழ்வு

Iftharபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவு பேணும் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28-06-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

மேற்படி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருந்த பண்டார ஹக்மன,மட்டக்களப்பு பிராந்திய இரண்டிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்கர் தசநாயக்க உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பெரும் திரளான பொது மக்கள்,ஊர் பிரமுகர்கள், புத்தஜீவிகள், கல்வியலாளர்கள்,வர்த்தகப் பிரமுகர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Ifthar

இங்கு தமிழ் மொழியில் மார்க்க சொற்பொழிவை காத்தான்குடி ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி அல்-ஹாபிழ் றமீஸ் ஜமாலியும் ,சிங்கள மொழியில் மார்க்க சொற்பொழிவை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் மாணவர் மௌலவி ஸாமிலும் நிகழ்த்தினார்.Police kky ifthar

Iftharகுறித்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் தொண்டர் சேவை பணிகளை காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி தலைமையிலான அவ் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment