கஞ்சா கடத்திய இருவர் கைது!

arrestகல்முனை: கஞ்சா கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட போது கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரைப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 506 கிராம் கேரளக்கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட 200 கிராம் உள்ளூர்க் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment