பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்

unnamed1ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

காத்தான்குடி: நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் செயற்குழு உறுபினர்களுடனான விஷேட கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று நடாத்தியது. இக் கலந்துரையாடல் நிகழ்வு NFGGயின் தலைமைத்துவசபை அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

NFGGயின் காத்தான்குடி பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM. ஹாறூன், MACM. ஜவாஹிர் ஆசிரியர், வித்யாகீர்த்தி MM. அமீர் அலி ஆசிரியர், MCAM. முஹ்ஸின் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பிர்களான உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆகாபூர்வமான கருத்தாடல்கள் இடம்பெற்றன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment