Category: Your Kattankudy
-
ஏழு சுவாரசியங்களைக் கொண்ட பொதுத்தேர்தல்
1.பிரச்சாரத்தைப் புறக்கணிக்கும் ஜனாதிபதியும், முதல்வரும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சென்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட அந்த கட்சியின் அரசியல் எதிரிகள் மற்றும் கட்சிக்கு வெளியில் இருந்தவர்களின் துணையுடனே வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
-
சின்னவன் என்ன செய்யப்போகிறான்? “இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பாராளுமன்றத்தில் பாருங்கள்”
– ராசி கிண்ணியா: அரசியலுக்கு புதியவன் இவன், சின்னவன். இவனால் என்ன செய்ய முடியும். அரசியலை படித்து அதன் அனுபவத்தை பெறுவதற்கே இம்ரானின் வயதளவு வருடங்கள் வேண்டும். இவன் சின்னவன் என்ன செய்யப்போகிறான் என்பவர்களுக்கு இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பாராளுமன்றத்தில் பாருங்கள் நீங்கள் செய்யாததை நான் செய்து காட்டுகின்றேன் என கிண்ணியா புஹாரியடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
-
எதிர்வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்”: மகிந்தவிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
இக்கடிதத்தின் பின்னணியில் பல இரகசியங்கள் புதைந்திருக்கலாம் கொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை இதுவரை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினருக்கு வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரி, மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“வாக்களித்த மக்கள் வறுமையில் வாடுகின்ற போது வெற்றி பெறும் அரசியல் வாதிகள் மாத்திரம் சுகபோகம் அனுபவிக்கினற்ற நிலை மாற்றப்பட வேண்டும்”
ஏறாவூர்: ‘குமருப் பிள்ளைகளை வீட்டிலே வைத்துக் கொண்டு ஓரு முப்பதாயிரம் ரூபா செலவு செய்து மலசல கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்ள முடியாமல் வாக்களித்த மக்கள் வறுமையிலும், கஸ்டத்திலும் வாழுகின்ற போது நாம் வாக்களித்து தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய அரசியல் வாதிகள் மாத்திரம் அவர்களுடைய குளியலறைகளுக்கு பல இலட்சம் பெறுமதியான மாபிள்கற்களைப் பொருத்தி சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும்’
-
“தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்கின்ற செய்தி மிகவும் கவலையளிக்கின்றது”: ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்கின்ற செய்தி மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
பிரதமர் பதவி வேறொருவருக்கே – மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்
கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை பெற்று வெற்றி பெறுமாயின் முன்னணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நபர் ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
-
விடுதலைப் புலிகளுக்கு இரு முறை பணம் வழங்கிய மஹிந்த – ரணில்
கொழும்பு: 2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும் எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று டி.வி தெரணவின் 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-
22 வருட சாதனையை முறியடித்தது இந்தியா
கொழும்பு: இலங்கைக்கு மற்றும் இந்தியாவுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இந்தியா அணி சார்பில் கோலி மற்றும் தாவன் ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 227 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
-
ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்தவிற்கு அவசர கடிதம்
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்து எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில், இக்கடிதம் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டமையை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
-
தன்மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார் றிசாத்
கொழும்பு: தன்மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெள்ளிக்கிழமை இரவு(14-08-2015) இரவு 10.00 மணி முதல் 11.30 வரை வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெறும் அதிர்வு நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார்.
-
பொதுபல சேனாவின் கொந்தராத்தை நிறைவேற்றிய முஸ்லிம்கள்…!
– அபூ அஸ்ஜத் குருணாகல்: அண்மையில் ஊடக மாநாடு என்ற போர்வையில் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் பொது பல சேனாவின் கொந்தராத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் மேல் அவதூறுகளை அள்ளிச் சொரிந்து, முஸ்லிம்களைக் கருவறுக்கத் திட்டம் தீட்டிச் செயற்படும் பொது பல சேனாவிடம் வாங்கிய பணத்துக்கு வக்கணை இல்லாமல் செயற்பட்டிருக்கிறார்கள்.
-
மயிலின் வெற்றி இரட்டிப்பானது: ஹக்கீமின் காதறுப்பு விழா நாளை
ஏ.எச்.எம்.பூமுதீன் – மருதமுனை மருதமுனை: மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி முகா வினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.