எதிர்வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்”: மகிந்தவிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

இக்கடிதத்தின் பின்னணியில் பல இரகசியங்கள் புதைந்திருக்கலாம்

letterகொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை இதுவரை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினருக்கு வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரி, மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, எ.எச்.எம். பவுசி , அத்தாவுத செனிவிரத்ன, சமல் ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அனுரா பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூத்த தலைவர்கள் இருக்கின்றனர்.

letter

எதிர்வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

ஆனால் இக்கடிதத்தின் பின்னணியில் பல இரகசியங்கள் புதைந்திருக்கலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment