ஏறாவூர்: ‘குமருப் பிள்ளைகளை வீட்டிலே வைத்துக் கொண்டு ஓரு முப்பதாயிரம் ரூபா செலவு செய்து மலசல கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்ள முடியாமல் வாக்களித்த மக்கள் வறுமையிலும், கஸ்டத்திலும் வாழுகின்ற போது நாம் வாக்களித்து தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய அரசியல் வாதிகள் மாத்திரம் அவர்களுடைய குளியலறைகளுக்கு பல இலட்சம் பெறுமதியான மாபிள்கற்களைப் பொருத்தி சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும்’
இவ்வாறு, கடந்த 12.08.2015 அன்று ஏறாவூரில் நடை பெற்ற NFGG + SLMC கூட்டணி இணைந்து ஏற்பாது செய்த பொதுகூட்டம் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னம் 2ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியிலாளர் அர்துர் ரஹ்மான் தெரிவித்தார்
அவர் தொடர்நதும் அங்கு உரையாற்றும் போது,
“பல எதிர்பார்ப்புகளோடு நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். ஆனால், அந்த அரசியல் வாதிகளோ வெற்றி பெற்றதன் பின்னால் இந்த மக்களை கண்டு கொள்வதில்லை. அவர்களுடைய பிள்ளைகள் மாத்திரம் சர்வதேச பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலுகின்றார்கள். ஆனால், நமது பிள்ளைகள் சாதாரண கல்வியைக்கூட உரிய முறையில் கற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலை இனிமேல் தொடரக்கூடாது இதற்காகவே நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு அரசாங்கத்தால் சம்பளம், வாகனக் கோட்டா என்று நிறையவே வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. அது சட்டமாகும், ஆனால் கிடைக்கின்ற அந்த சலுகைகளையும் வசதிகளையும் வாக்களித்த மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும் இதுவே தர்மமாகும் இதை எந்த அரசியல் வாதிகளும் செய்வதில்லை. அந்தந்த அரசியல் வாதிகளும் அவர்களது குடும்பமுமே அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தர்மம் அடிப்படை வசதியற்று வாழுகின்ற மக்களும் சென்றடைய வேண்டும் இதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இன்சா அல்லாஹ் நாம் பாராளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் சம்பளம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களையும் மக்களின் நலன்களுக்காகவே பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்
அது மட்டுமல்லாம் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றப் பிரதிநிதி குறிப்பிட்ட ஒரு சமூகத்திகோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஊருக்கோ சொந்தமானவர் அல்ல. மாறாக நாட்டுப்பற்றுள்ளவராக சமூகங்கள் மீது அக்கரை கொண்டவராக நீதி நியாயத்தை கடைப்பிடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் இப்படியானவர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
என்னைச் சந்தித்த ஏறாவூர் சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டார் ‘நீங்கள் வெற்றி பெற்றால் எங்களுடைய ஏறாவூருக்கும் சமமாக உதவி செய்வீர்களா என்று’ அவரிடம் நான் சொன்னேன் ‘இல்லை. ஏனென்றால் காத்தான்குடியை விட சில தேவைகள் ஏறாவூருக்கு அதிகமாக இருக்கலாம் ஆகவே ஏறாவூருக்கு அதிகமாக உதவி செய்யவேண்டி வரும் இப்படி ஏனைய பிரதேசங்களின் தேவைகளுக்கேற்ப உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று’ இப்படித்தான் யோசிக்க வேண்டும் அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
கடந்த காலத்தில் நாம் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி செய்த தவறின் காரணமாக இன்றுவரையும் பிரதேச வாதம் தொடர்நது கொண்டிருக்கிறது இதற்கும் நாம் முற்றுபுள்ளி வைக்க நினைக்கிறோம். முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக வாழுகின்ற காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய ஊர்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு வருட பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பிலும் நாம் யோசித்தோம் ஆனால், இந்தத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாம் இணைந்து போட்டியிடுவதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. எதிர் காலத்தில் இன்சா அல்லாஹ் நாம் அவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு பிரதேச வாதத்தை இல்லாதொழிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.
இஸ்லாமிய வரலாற்றை எடுத்துக் கொண்டால் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சஹாபாக்கள் பல உயிர்த் தியாகங்களையும் உடமைகளையும் இழந்துதான் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக போராடினோம் கடந்த ஜனவரி எட்டாம் திகதி வாக்களித்து ஒரு வரலாறு காணாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இதற்கு நாம் பெரிதாக எந்தத் தியாகத்தையும் செய்துவிடவில்லை. சிந்தித்து வாக்களித்தோம் அதுவே ஒரு மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. இதைத்தான் இந்தத் தேர்தலிலும் உங்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம். இது ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் வருங்கால சமூகத்திற்கு நாம் செய்கின்ற பெரும் தியாயமாகும்.
ஆகவே, எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் எமது சின்னமான மரத்திற்கும் உங்களுரில் போட்டியிடுகின்ற வேட்பாளரின் இலக்கத்திற்கும் என்னுடைய இலக்கமான 2ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தந்துரையின் ஆரம்பத்தில் “எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் நான் எவ்வாறு நடந்து கொள்வேன் என்ற சத்தியப் பிரமானத்தையும்” பெறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு மக்கள் முன்வாசித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
Published by


Leave a comment