சின்னவன் என்ன செய்யப்போகிறான்? “இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பாராளுமன்றத்தில் பாருங்கள்”

mahroof– ராசி

கிண்ணியா: அரசியலுக்கு புதியவன் இவன், சின்னவன். இவனால் என்ன செய்ய முடியும். அரசியலை படித்து அதன் அனுபவத்தை பெறுவதற்கே இம்ரானின் வயதளவு வருடங்கள் வேண்டும். இவன் சின்னவன் என்ன செய்யப்போகிறான் என்பவர்களுக்கு இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பாராளுமன்றத்தில் பாருங்கள் நீங்கள் செய்யாததை நான் செய்து காட்டுகின்றேன் என கிண்ணியா புஹாரியடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றும் போது இவர்கள் சொல்வது போல் நான் சின்னவன்தான் என் வயதுபோல் வயது தேவைதான் நான் அரசியல் படிக்க ஆனால் இவர்களின் வயதை விட அதிகமான அரசியல் ஞானத்தை படித்த அரசியல் ஞானியின் வாரிசாக வந்த எனக்கு இவர்கள் அரசியல் சொல்லித்தர தேவையில்லை. மீன் குஞ்சுக்கு நீந்த இவர்கள் சொல்லித்தர வேண்டுமா….? இனி என்னிடமிருந்து அரசியலை நீங்கள் படித்துக் கொள்ளுங்கள். என்னை விமர்சிக்கும் நீங்கள் நான் இரண்டு வருடம் மாகாணசபையில் நான் மக்களுக்காக செய்ததை கூட நீங்கள் இதுவரை செய்யவில்லை. இதுவரை அரசியலில் என்ன செய்து கிழித்தீர்கள்.

mahroof

இம்ரான் மகரூப் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது போல் எனக்கு கிடைக்கும் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்களையும் எனக்காக பாடுபட்ட அனைவருக்கும் வழங்குவேன். அதனை விற்று தன் வயிற்றை நிரப்பும் அரசியலை நான் ஒருபோதும் செய்யப்போவதில்லை. நீங்களும் அவ்வாறு செய்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளை விரட்டியடியுங்கள்.

mahroof kinniya

எனது அரசியல் முழுக்க முழுக்க இந்த மாவட்ட மண்ணையும் மக்களையும் மையப்படுத்தி அபிவிருத்தியை முன்னோக்கியதாகவே இருக்கும். அத்தோடு கிண்ணியா பைசல் நகர் பிரதேசத்தில் இதுவரை குடியிருந்து வரும் எனது சகோதரர்களின் எல்.ஆர்.சி குடியிருப்பு காணிகளுக்கான உறுதிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து அவர்களின் உள்ளங்களில் சந்தோசத்தை ஏற்படுத்துவேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இதன் போது பிரதேச மூத்த ஐக்கிய தேசிய கட்சி அரசில்வாதிகள், அரசியல் பிரமுகர்கள், புத்தஜீவிகள், ஏராளமான அரசியல் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment