Category: Your Kattankudy
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: பாராளுமன்றத் தேர்தல் 2015இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒழுங்கு விதிகள் மற்றும் இஸ்லாமிய விதிமுறைகளுக்குள் நின்று இத்தேர்தலை முன்னனெடுத்து வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் ஜூம்ஆ பள்ளிவாயல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.
-
“மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தேர்தல் முடிவுகள் வரலாம்”
இனியவன் மட்டக்களப்பு: பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மணித்தியாலங்களே மீதமுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர்களின் தற்போதய மனோநிலையின் அடிப்படையில் புதிய தேர்தல் முடிவு ஒன்று வெளிவரலாம் என்று இரகசிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் சட்டங்களுக்கு அமைய தற்போது அவ்வறிக்கையினை தவிர்த்து வந்தபோதிலும், இத்தகவல்கள் தற்போது வெளிப்படையாகவே குறித்த வேட்பாளர்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.
-
“மஹிந்த ஆதரவாளர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை”
கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் அனுமதியின்றி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உட்பட மஹிந்த தரப்பினருக்கு நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் முன்னணி செயலாளர் ஊடாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைய எதிர்பார்க்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தோனேஷியாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் மாயம்!
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை இழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். டிரிகானா ஏர் சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் பப்புவா பிராந்தியத்தில் உள்ள ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக போக்குவரத்து துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஹஜ் பயான் மற்றும் பிரியாவிடை நிகழ்வு – 2015
மெளலவி.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி காத்தான்குடி: இவ்வருடம் புனித ஹஜ்-2015 ஐ மேற்கொள்ளவுள்ள காத்தான்குடி யைச் சேர்ந்த சகல ஹாஜிமார்களுக்கான ஹஜ் பொது பயான் நிகழ்வு பின்வரும் ஒழுங்கின்படி நடைபெறும். இன் நிகழ்வுகளில் அனைத்து ஹஜ் யாத்திரியர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
-
மட்டு மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன்- 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று 16 ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
-
ஒரு கோடி 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதி
கொழும்பு: பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை (17) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில், 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளில் 3653 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களில் 2498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
-
தேர்தல் மோசடிகளை அறிவிக்க SMS சேவை
கொழும்பு: நாளை (17) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளை உடனே அறிவிப்பதற்காகவும், வாக்களிப்பு நிலைய கடமைகளை ஒழுங்குபடுத் துவதற்காகவும் குறுந்தகவல் சேவை ஒன்று அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. குறித்த குறுந்தகவல் சேவையை ரிவி இடைவெளி, ரிவி இடைவெளி குறித்த மாவட்டம் இடைவெளி, முறைப்பாட்டை பதிவு செய்து 2343 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் நேரடியாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.
-
முற்றிலும் மாறுபட்ட சூழலில் இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தல்
கொழும்பு: கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல்கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சுயாதீன கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
-
“ஓட்டமாவடிக் கொலைக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் சம்பந்தமில்லை:எனது மக்கள் செல்வாக்கைத் திசை திருப்ப அமீர் அலி சதி”
வேட்பாளர் ரியாழின் ஊடகப்பிரிவு ஓட்டமாவடி: இன்று ஓட்டமாவடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் எமது ஆதரவாளர்களுக்கும் எந்த சந்தமுமில்லை. தனிப்பட்ட குரோதங்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இப்பிரதேசத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் அமீர் அலி அவர்கள் தான் இழந்துள்ள மக்கள் செல்வாக்கை தன் பக்கம் திருப்பிக் கொள்ள இக்கொலைக்கு அரசியல் சாயம் பூசி ஆதரவு தேட முற்படுகிறார்.
-
பதினெட்டில் தெரிந்து விடும் எல்லாம்
– மதியன்பன் பதினெட்டில் தெரிந்து விடும் எல்லாம் பதவிக்குப் பலபேரு மல்லாம் புதினங்கள் காட்டுகிறார் புதுப்படத்தை ஓட்டுகிறார் சதிகாரன் கையுண்டு வில்லாம்
-
ஓட்டமாவடியில் பிரதியமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளார் இன்று (15) சுட்டு கொலை செய்யப்பட்டார்
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.