பதினெட்டில் தெரிந்து விடும் எல்லாம்

what_politics_say__48305[1]– மதியன்பன்

பதினெட்டில் தெரிந்து விடும் எல்லாம்
பதவிக்குப் பலபேரு மல்லாம்
புதினங்கள் காட்டுகிறார்
புதுப்படத்தை ஓட்டுகிறார்
சதிகாரன் கையுண்டு வில்லாம்

மேடைகள் எல்லாமே ஏச்சு
மேதாவித் தனமான பேச்சு
கோடைமழை இடியாக
கோமாளித் தனமாக
சாடையிலே தெரிகிறது வீழ்ச்சி

ஏதேதோ கொடுத்தவரோ பார்த்தார்.
எதிரிகளை தன்பக்கம் சேர்த்தார்.
பாதைகளில் பெனர்வைத்து
பக்குவமாய் புன்னகைத்து
போதையினை ஊட்டியவர் தோற்றார்

செத்தவரும் வாக்களிக்க வருவார்
செல்லாத வாக்குகளும் தருவார்
கொத்தாக வாக்குகளை
குவிப்ப்பார்கள் அதற்குள்ளே
உத்தமரைத் தெரிவு செய்ய வருவீர்

Published by

Leave a comment