Category: Your Kattankudy
-
இரண்டு கட்சிகள் மாத்திரம் சேர்ந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகுமா?
கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். அதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சு பதவிகளை கைப்பற்றிகொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கமாக அழைக்கப்படலாம்.
-
எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி பிரதம கொரடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது
கொழும்பு: புதிய பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி பிரதம கொரடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 95 பாராளுமன்ற உறுப்பினர்களின் 80 பேர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இலங்கை: 35 ஆயிரம் பேருக்கு தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை!
நுவரெலியா: இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500 கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு ஒரே நாளில் 2 மணித்தியாலங்களுக்குள் 3000 கிலோ கிராம் கொழுந்து பறித்து அதில் தேயிலை தூள் தயாரித்து 35,000 பேருக்கு தேநீர் வழங்கி இந்த கின்னஸ் சாதனை புரியப்படுகிறது.
-
இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட இருநூறு குடியேறிகள் மூழ்கியிருக்கலாம்
திரிபோலி: லிபிய கடற்கரைக்கு அருகே குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட இருநூறு குடியேறிகள் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை சென்றடைய முயற்சித்த அந்த இரண்டு படகுகளில் கிட்டத்தட்ட ஐநூறு குடியேறிகள் பயணித்ததாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் வில்லியம் ஸ்பிண்ட்லர்தெரிவித்துள்ளார்.
-
விசேட விசாரணைப் பிரிவில் திறைசேரி செயலாளர் ஆஜர்
கொழும்பு: முன்னாள் திறைசேரி செயலாளரான பீ.பி. ஜயசுந்தர சற்று முன்னர் விசேட விசாரணைப் பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த அரசாங்கத்தில், மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தே இவ்விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
அளெகரியங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 56 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
கொழும்பு: சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல்வேறு அளெகரியங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 56 இலங்கை பணிப்பெண்கள் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். குறித்த பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றினூடாக சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
-
“சங்கக்கார இல்லாத முதலாவது போட்டி வருத்தமளிக்கிறது”: மெத்யூஸ்
கொழும்பு: சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மெத்யூஸ் கூறியுள்ளார். சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் மு.காவின் கைவசம்! அபிவிருத்திகள் பாரபட்சமின்றி இடம்பெறும் – ஹரீஸ் எம்.பி
ஹாசிப் யாஸீன் வரிப்பத்தான்சேனை: நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்றிரவு (27) நேரடி விஜயம் செய்த ஹரீஸூக்கு அப்பிரதேச மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
-
ஒஸ்ரியாவில் நின்றுகொண்டிருந்த லொறியில் குடியேறிகளின் சடலங்கள்
வியன்னா: ஒஸ்ரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லொரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஒஸ்ரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.மேற்படி லொரியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள், 20 முதல் 50 வரையிலான சடலங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
புதிய அமைச்சரவை நியமனம்: தாமதத்திற்கான காரணம் என்ன..?
கொழும்பு: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பத்து நாட்கள் சென்றுள்ள போதிலும் அமைச்சரவை நியமனங்களில் மேலும் தாமதமாகலாம் என தெரியவந்துள்ளது. தேர்வுசெய்யப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று கூடவுள்ளது. புதிய அமைச்சரவை செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி நியமிக்கப் படுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் அவைத் தலைவர் மலிக் சமரவிக்கிரம நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
-
“தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்”: அஷ்ஷெய்க் பிர்தௌஸ்
– நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “தேசியப்பட்டியல் நியமனம் என்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எமது நிலைப்பாடாகும்” என NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
-
சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை கையளித்தது
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணியின் தலைவர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சனால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை நேற்றைய தினம் (26) மாலை கையளித்தது. மாவட்ட செலயகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.கிரிதரன், திருமதி ஜே. திருச்செல்வம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா உள்ளிட்டோரும் கலந்து…