இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட இருநூறு குடியேறிகள் மூழ்கியிருக்கலாம்

libyaதிரிபோலி: லிபிய கடற்கரைக்கு அருகே குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட இருநூறு குடியேறிகள் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை சென்றடைய முயற்சித்த அந்த இரண்டு படகுகளில் கிட்டத்தட்ட ஐநூறு குடியேறிகள் பயணித்ததாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் வில்லியம் ஸ்பிண்ட்லர்தெரிவித்துள்ளார்.

அந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களை லிபிய கடலோரக் காவற்படையினர் கரைக்கு கொண்டு வரும் பணி இன்னமும் தொடருவதாக தெரிவித்துள்ளார். படகில் வந்த அகதிகளில் பலர் சிரியா, வங்கதேசம் மற்றும் சஹாராவின் தெற்கே அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளின் பிரஜைகள் என்று நம்பப்படுகிறது.

libya
லிப்யக் கடலில் மூழ்கிய குடியேறிகளின் படகு ஒன்று மீட்கப்படுகிறது

லிபிய கடலோர காவற்படையின் கப்பல்கள் சிறியதாக இருப்பதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான போதுமான கட்டமைப்புகள் லிபியாவிடம் இல்லை என்றும் மீட்புப்பணியிலீடுபடும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நேரம் கடலில் மிதந்து செல்ல முடியாத படகுகளைக் கொண்டு லிபியாவிலிருந்து இத்தாலிக்கு வர முயன்றவர்களில், இந்த ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Published by

Leave a comment