“சங்கக்கார இல்லாத முதலாவது போட்டி வருத்தமளிக்கிறது”: மெத்யூஸ்

sanga mathewsகொழும்பு: சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மெத்யூஸ் கூறியுள்ளார். சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்போது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி சங்கக்காரா ஓய்வு பெற்ற பிறகு அவர் இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

இந்த சூழல் இலங்கை அணி வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவற்கு முன்னதாக பேசிய மெத்யூஸ், “சங்கக்காராவின் ஓய்வையடுத்து எங்கள் அணி இன்னும் ஒரு போட்டியை கூட விளையாடாததால் சற்று கடினமாகத்தான் இருக்கும்.

sanga mathews

அவரின் இழப்பு இலங்கை அணிக்கு சற்று கடினமான ஒன்றாகும். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். இருப்பினும் அதை ஈடுகட்டும் முயற்சியை தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, 50 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுக்களை இழந்திருக்கின்ற நிலையில், மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

Published by

Leave a comment