Category: Your Kattankudy
-
தொலைக்காட்சி, கணினி விளையாட்டில் மூழ்கினால் பரீட்சை போச்சு: கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
லண்டன்: டிவி, கம்பூட்டர் கேம்ஸிலேயே மூழ்கி நேரத்தை வீணாக்காதே என்று பெற்றோர்கள் அலுத்துக்கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல் தெரிகிறது. பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் பதினோராவது ஆண்டு, அதாவது GCSE (GCE O/L)தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.
-
மொபிடல் நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர் சேவை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனர்களான ஸ்ரீலங்கா ரெலிகோம் மொபிடல் நிறுவனம் கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை இல-39/4 மட்டக்களப்பு மத்திய வீதியில் இன்று (4) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
-
குமார் சங்ககாரவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது!
கொழும்பு: இலங்கை அணியின் நட்சத்திர வீர ராக திகழ்ந்த முன்னாள் வீரரான குமார் சங்கக்காரவின் டுவிட்டர் கண க்கு ஹெக் (இணையத்திருட்டு) செய்யப்பட்டுள்ளது. இணையத் திருடர்களால் முடக்கப்பட்டுள்ள அவரது டுவிட்டர் வலைத் தளத்தில் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
மலசலகூட குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட பிரதமரின் கடிதங்கள்
கொழும்பு: மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும் அவற்றில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
“நான்கரை வருடம் வரை அரசை கலைக்க முடியாது”: ஜனாதிபதி மைத்திரிபால
கொழும்பு: கடந்த எட்டு மாதங்களில் நாட்டின் அரசியலில் புதிய அனுபங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பல கட்சிகளின் உதவியுடன் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி செய்த 100 நாட்களைக் கொண்ட தற்காலிக அரசாங்கத்தில், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கொண்டிருந்தது.
-
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை: 42 அமைச்சர்கள் விபரம்
கொழும்பு: தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு,
-
அகதிகளின் கைகளில் எண்களிடும் முறையை நிறுத்தியது செக் குடியரசு
வியன்னா: அகதிகளின் கையில் எண்களை எழுதும் முறையை நிறுத்துவதாக செக் குடியரசின் காவல்துறை தெரிவித்துள்ளது.மனித உரிமை குழுக்களிடமிருந்து எழுந்த பரவலான விமர்சனத்தையடுத்து அந்நாடு இந்த முடிவுக்கு வந்துள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவர் பேனா மூலமாக அகதி ஒருவரின் கையில் எண்களை எழுதும் படம் சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளியானது.
-
அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகை
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் அல் நயான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (03) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
-
எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியது ஜனநாயகத்திற்கு முரணானது – தினேஷ் குணவர்தன
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: எதிர்க்கட்சித் தலைமைத்துவம் வழங்கியது ஜனநாயகத்திற்கு முரணானது என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாததால் பாடசாலையாலும் பெற்றோராலும் புறக்கணிக்கப்படும் சின்னஞ் சிறுசுகள்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: தரம் 5 புலமைப்பரிசில் என்றாலே பிள்ளைகளின் பெற்றோருக்கு அலர்ஜிதான் குறிப்பாக தாய்மார் படும்பாடு எண்ணிலடங்காதவை ஏனெனில் எவ்வளவுதான் மிகவும் கஷ்டப்பட்டு கற்பித்தாலும் பரீட்சை நேரத்தில் பிள்ளைவிடும் தவறினால் அப்பரீட்சையில் அனேகமான பிள்ளைகள் சித்திபெறாது விடுகின்றமை துரதிருஷ்டவசமாகும்.
-
பொலித்தின் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகள் தடைசெய்யப்படுவதால் மாற்றீட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டும்: மட்டு அரசாங்க அதிபர்
எம்.ஐ.அப்துல் நஸார் மட்டக்களப்பு: பொலித்தின் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகள் தடைசெய்யப்படுவதால் மாற்றீட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் சுற்றுலா தகவல் மையத் திறப்பு விழாவின் இரண்டாம் நாள் கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய உணவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
பிரபல பாடசாலைகளுக்கான அனுமதிகள் – ஓர் பார்வை
– ஏறாவூர் அபூ பயாஸ் நகர்ப்புற பாடசாலைகள் அதிக வளங்களையும் அதனூடான முன்னேற்றத்தையும் கொண்டிருப்பது இயல்பானதுதான். இவ்வகை பாடசாலைகள் தமது அடைவு மட்டங்களினாலும் வள வசதிகளினாலும் மக்களிடம் கேள்வியை (டிமான்ட்) அதிகரித்துக் கொண்டு தங்களை “பிரபல பாடசாலைகள்” எனும் தரத்திற்கு உயர்த்திக்கொண்டன. இப்பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதித்தல் இன்றைய இலங்கையின் பிரச்சினைகளில் ஒன்று.