– பழுலுல்லாஹ் பர்ஹான்மட்டக்களப்பு: தேசிய கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனர்களான ஸ்ரீலங்கா ரெலிகோம் மொபிடல் நிறுவனம் கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை இல-39/4 மட்டக்களப்பு மத்திய வீதியில் இன்று (4) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்பட்ட மேற்படி புதிய வாடிக்கையாளர் சேவை நிலையத்தை ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி.குமாரசிங்க சிறிசேன திறந்து வைத்தார்.இதன் போது மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பல்வேறு சேவைகள் மொபிடல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலைய திறப்பு விழாவில் மொபிடல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்ஜித் ஜி ரூபசிங்க உட்பட ஸ்ரீலங்கா ரெலிகோம் மற்றும் மொபிடல் நிறுவனங்களின் உயரதிகாரிகள்,இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ,பௌத்த மதப் பெரியார்கள்,பொலிஸ் உயரதிகாரிகள்,வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்த மொபிடல்; சேவை நிலையம் முழு அளவிலான வாடிக்கையாளர் சேவைகளை கொண்டுள்ளதோடு அதி நவீன 4 ஜி எல்.ரீ.ஈ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது அத்தோடு கிழக்குப் பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள்,டெப் கருவிகள்,தரவுக் கருவிகள் என்பவற்றை அனுபவித்து பிரயோகிப்பதோடு தகவல் தொழில்நுட்பத்தின் மேலும் பல அம்சங்களையும் அனுபவித்து உணரக் கூடிய வாய்ப்பையும் வழங்குகின்றது.இலங்கையின் தேசிய நடமாடும் தொலைத் தொடர்புச் சேவை வழங்குனர்களான மொபிடல் ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான இணை நிறுவனமாகும் இந் நிறுவனம் மட்டக்களப்பில் புதிதாக திறந்து வைத்துள்ள வாடிக்கையாயர் சேவை நிலையம் ஊடாக கிழக்கு பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு வினோதத்துடன் கூடிய வசதியான சேவைகளை வழங்கும் ஒரு மத்திய நிலையமாக செயற்படவுள்ளது.மட்டக்களப்பு மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலையம் பன்முக புத்தாக்க தொழில்துறை தீர்வுகளையும்,நடமாடும் தொலைபேசிச் சேவை,புரோட் பிராண்ட் சேவை,நிறுவனத் தீர்வுகள்,சர்வதேச நேரடி அழைப்பு,தொலைபேசிச் சேவைகள் மற்றும் இன்னும் பல மெறுமதி சேர் சேவைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment