பிரபல பாடசாலைகளுக்கான அனுமதிகள் – ஓர் பார்வை

school_build_200_150[1]– ஏறாவூர் அபூ பயாஸ்

நகர்ப்புற பாடசாலைகள் அதிக வளங்களையும் அதனூடான முன்னேற்றத்தையும் கொண்டிருப்பது இயல்பானதுதான். இவ்வகை பாடசாலைகள் தமது அடைவு மட்டங்களினாலும் வள வசதிகளினாலும் மக்களிடம் கேள்வியை (டிமான்ட்) அதிகரித்துக் கொண்டு தங்களை “பிரபல பாடசாலைகள்” எனும் தரத்திற்கு உயர்த்திக்கொண்டன. இப்பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதித்தல் இன்றைய இலங்கையின் பிரச்சினைகளில் ஒன்று.

இலங்கை மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் அதிகரிக்கத் துவங்கியதிளிருந்தும் நகர்ப்புற சனச் செறிவின் தாக்கத்தினாலும் உருவானதே இப்பிரச்சினையாகும்.

மக்கள் தமது சொந்த கிராம,ஊர் பாடசாலைகளை புறந்தள்ளி பிரபல பாடசாலைகளை நோக்கி நகர்வது அவரவர் விரும்பத்தை பொருத்தது. இதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால் அரசும் பாடசாலை நிர்வாக முறைமையும் இப்பிரச்சினையை கையாள்வதற்கென ஒருபொறிமுறையை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியாதே.

ஆம் அதனடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவைகள்தான்…

1. ஐந்தாம் ஆண்டு புலைமை பரிசில் பரீட்சை ( இதன் முக்கிய நோக்கமே உயர்பாடசாலை அனுமதிக்கு மாணவர்களை இணங்காண்பதுதான்)

2. கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளில் பின்பற்றப்படும் புள்ளி வழங்கல் முறைமை.

இவ்வாறான முறைமைகளுக்குள் அதிக போட்டி நிலவாத வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கல்விப் பணிப்பாளர் மட்டத்தில் சில முறைமைகள் பின்பற்றப்படுகின்றன.

1. ஊட்டப்படசாலை முறைமைகள்.

2. குறித்த பாடசாலை அனுமதிக்கான எல்லைவரையறை முறை (segment system)

மேற்படி முறைமைகள் சரிவர ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அதியுயர் நகரங்களிலே இன்னும் பிரச்சினைகள் நிலவத்தான் செய்கின்றன. அதற்கு காரணம் முறைமைகளில் குறைபாடு அல்ல. அதை அமுல்படுத்தும் பாடசாலை மற்றும் வலய நிர்வாகத்தின் குறைபாடுகளாகும். அந்த முறைமையை ஏற்றுக்கொள்ளாது அதனையும் தாண்டி தங்களின் செல்வாக்கினை பயன்படுத்தும் மக்களின் போக்குகளாகும்.

கல்வி நிர்வாகமே சிந்தியுங்கள்!

உங்கள் பதவிகள் இறைவனின் அமானிதங்கள். உங்கள் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முறைமைகளை சரிவர நிறைவேற்றுங்கள். அதை புரியாமல் உங்களை நாடும் சகல தரப்பு மக்களுக்கு நாகரிகமாக பண்பாக புரிய வைக்க முனையுங்கள்.

பெற்றார்களே !!! நிதானப்படுங்கள்.

1.உங்கள் பிள்ளைகள் உயர்தர பாடசாலைகளில் கல்விகற்று முன்னேற வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான். ஆனால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன். அதை தீர்க்க உருவாக்கப்பட்டுள்ள முறைமைகளுக்கு ஒத்துழையுங்கள்.

2. இல்லை. அவ்வாறான் முறைமைகள் அமுலாக்கும் அதிகாரிகள் அநீதி செய்கின்றார்களா? அதை உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா? விரையுங்கள். எழுத்து மூலம் உரிய மேல்மட்டங்களுக்கு அறிவியுங்கள். வலயக் கல்வி பணிப்பாளர் – மாகாண கல்விப் பணிப்பாளர்- கல்வி அமைச்சு – ஜானதிபதி என்றவாறு உங்கள் முறைப்பாடுகளை அனுப்புங்கள்.

3. உங்கள் பிள்ளை மட்டுமா பாதிக்கப்படுகிறது? நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு செல்லும் உங்கள் கிராமத்தின் ஏனைய பிள்ளைகள் பாவமில்லையா? எதிர்காலம் சந்ததிகள் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்க கூடாது. எனவே உங்கள் பகுதி பாடசாலை நிர்வாகத்தோடு இணைந்து உங்கள் சொந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யுங்கள்.தரம் உயர்த்த உதவுங்கள்.

இளைஞர்களே! அமைதியாகுங்கள்.

1. உங்கள் உறவுகளுக்கு மட்டும் கல்வியில் அநீதி என்றால் கொதிப்படைகிண்றீர்களே ஏன்? உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவனில் உங்களுக்கு இரக்கம் இல்லையா? எல்லோருக்காகவும் சிந்தியுங்கள்.

2. எந்தப் பிள்ளைக்கு அநீதி நடந்தாலும் போராடுங்கள். ஆனால் போராட்டம் நியாயமானதாய் உரிய வழிமுறையில் இருக்கட்டும். நீதி கிடைக்கும்வரை போராடுங்கள்.

3. இலங்கையின் உயர்தர பாடசாலைகள் சகலவற்றினதும் ஆரம்ப வரலாறு ஓலைகுடிசைகளும் கொட்டில்களுமாகவே இருந்திருக்கும். உங்கள் பின்தங்கிய பாடசாலையையும் முன்னேற்றபிரபல ப் பாருங்கள்.

4. உங்கள் பாடசாலையின் மீது அக்கறை காட்டுங்கள். நம்பிக்கை வையுங்கள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் உள்ளாகுங்கள். அதிபர் ஆசிரியர்களுக்கு உங்கள் இணைவினால் நம்பிக்கை கொடுங்கள்.

மாறாக… மீன் என்றால் தனக்குத்தான் நடுப்பகுதி என்று ஊரே சண்டையிட்டால் … நாறிப்போகும்…

– எஸ்.எம்.அல் அமீன் (SLAS)

Published by

Leave a comment