கொழும்பு: இலங்கை அணியின் நட்சத்திர வீர ராக திகழ்ந்த முன்னாள் வீரரான குமார் சங்கக்காரவின் டுவிட்டர் கண க்கு ஹெக் (இணையத்திருட்டு) செய்யப்பட்டுள்ளது. இணையத் திருடர்களால் முடக்கப்பட்டுள்ள அவரது டுவிட்டர் வலைத் தளத்தில் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள சங்கா, தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளமைக்கு வருத்தம் தெரி வித்துள்ளதுடன், தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அது வரையில் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்யும் அனைத்து செய்திகளையும் புறக்கணிக்கு மாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான குமார் சங்கக்கார இந்தியாவிற்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
தற்போது இங்கிலாந்தின் கவுன்டி அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் சங்கக்கார போட்டி நடுவே இதனை அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு தனது கருத்து மற்றும் செய்திகளை வெளியிட்டு வரும் சங்காவின் டுவிட்டரை சுமார் 5 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
Published by

Leave a comment