- ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத்
அம்பாறை: இம்மாதம் 18 ம், 19 ம், 20 ம் திகதிகளில் ஹோமாகமவில் நடைபெற்ற வரும் மெய்வல்லுநர் போட்டியில், நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எம். ஐ. எம். மிப்றான் 7.27 மீற்றர் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு வெங்கள பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டார். அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியின் போதும் நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எம். ஐ. எம். மிப்றான் 7.21 மீற்றர் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற தேசிய, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக தனது வெற்றியை நிலை நிறுத்திவந்துள்ளார்.

இவ்வாறாக ஆண்டு தோறும் சாதனைகள் பலவற்றைப் புரிந்து வரும் மிப்றான் மற்றும் அட்டாளைச்சேனை, அம்பாறை மாவட்ட வீரர்களை பயிற்றுவித்த பெருமை தற்போதைய அம்பாறை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜிடீனும் அவருக்கே சேரும்.

இவர் அட்டாளச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு கழகத்தின் வீரரும், அட்டாளச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். இவர் மேலும் சாதனைபுரிவதற்கு வாழ்த்துகிறோம்.
Leave a comment