இந்தியாவுடன் மோதுவது மிகப்பெரும் சவால்: அப்ரிடி

afridiலாஹூர்: இந்திய அணியுடன் மோதுவது என்பது எப்போதுமே மிகப்பெரும் சவாலானதுதான், ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் தலைவரான ஷாகித் அப்ரிடி, இந்திய மண்ணில் அந்த அணியை எதிர்கொள்வதில் இருக்கும் சவால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

எப்போதுமே இந்திய அணியுடன் மோதுவது என்பது சவாலானது என தெரிவித்துள்ள அப்ரிடி, தமது அணியினர் அனைவரும் அந்த சவாலை எதிர்கொண்டு கிண்ணத்தை வெல்லும் துடிப்புடன் இருக்கின்றனர் என்றார். ஆனால் உலகக்கிண்ண ஆட்டங்களில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது இல்லை, அந்த பெருமையை தக்க வைக்க இந்திய அணி முனைப்பு காட்டும்.

6-வது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை சமீபத்தில் மும்பையில் வெளியிடப்பட்டது. குரூப் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தகுதி சுற்று அணி,

afridi

குரூப் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதி சுற்று அணி இடம் பெற்றுள்ளன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மார்ச் 19 ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெற் உள்ளது.

Published by

Leave a comment