Category: Your Kattankudy
-
ஞானசாரவுக்கு பிணை; குழப்பம் விளைவிக்க கூடாது
ஹோமாகம: சந்யா எக்னலிகொடவை பயமுறுத்தியமை தொடர்பான வழக்கில், பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் (23) ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.
-
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்துவாவினை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் ஹாரூன் சஹ்வி
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற விடயமான அல்- கிம்மா இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்வியினால் புதிதாக அஸ்-சபீல் எனும் பெயருடன் ஜும்மா பள்ளிவயால் நிர்மாணிக்கப்பட்டு அதில் ஜும்மா தொழுகை நடாத்தப்பட்டு வரும் விடயமாகும். ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இப் பள்ளிவாயலானது
-
“முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை மறக்கடிக்க முடியாது”
ஏறாவூர்: புதிய அரசியலமைப்பு மூலம் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு ஒன்று உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.
-
“சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது”
யாழ்ப்பாணம்: வடமாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கின்றார்.
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: ஜூன் 23-ம் திகதி வாக்கெடுப்பு
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கூடிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜூன் 23-ம் திகதி நடக்கும் என்று பிரதமர் டேவிட் கமரன் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் பற்றி ஆராயும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
-
கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல்
பழுலுல்லாஹ் பர்ஹான் டோஹா: கத்தாரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த உலமாக்களுக்கான மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வொன்ரு எதிர்வரும் 26ம் திகதி வெள்ளிக்கிழமை கத்தார் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அப்துல்லாஹ் பின் ஸைத் ஆல் மஹ்மூத் அரங்கில் (பனாரில்) நடைபெறவுள்ளது.
-
துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்க மறுத்த அப்பிள்
கலிஃபோர்னியா: அமெரிக்காவின் சென் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், அப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, அப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது.
-
ஜேர்மனியில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை
பேர்லின்: ஜேர்மனிக்கான மூன்று நாட்கள் அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்நாட்டு சான்சலர் ஏங்கலா மேர்க்கலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவ அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடியில் தொடர் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது-14 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடராக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிசார் 16 நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
-
“அரசியல்வாதிகளுக்கு கிடைக்கின்ற மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை”
பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் NFGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: “பொதுப்பணத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து விட்டு அதில் தனிப்பட்ட பல சுய இலாபங்களையும் பெற்றுக்கொள்கின்ற அரிசியல் வாதிகளுக்கு கிடைக்கின்ற வரவேற்பும் மரியாதையும், சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து பாடுபடுகின்றவர்களுக்கு கிடைப்பதில்லை.” என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
அப்துர் றஊப் மௌலவியும் நானும்; படிப்பினை மிக்க ஒரு வரலாற்றுப்பதிவு
முஹம்மது நியாஸ் அப்துர் றஊப் மௌலவியும் அவரைச்சார்ந்த உலமாக்களும் பிரச்சாரம் செய்து வருகின்ற அத்வைத சித்தாந்தங்கள் மற்றும் அவை சார்ந்த வழிகேடுகளுக்கு எதிராக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிகத்தீவிரமாக நான் பிரச்சாரம் செய்து வருவதை தமிழ்பேசும் ஏகத்துவ சமூகமே நன்கறியும். ஆனாலும் ஒரு காலக்கட்டத்தில் நான் அப்துர் றஊப் மௌலவியுடைய தீவிர ஆதரவாளனாக இருந்துவந்தேன் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?