- ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
கல்குடா: கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற விடயமான அல்- கிம்மா இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்வியினால் புதிதாக அஸ்-சபீல் எனும் பெயருடன் ஜும்மா பள்ளிவயால் நிர்மாணிக்கப்பட்டு அதில் ஜும்மா தொழுகை நடாத்தப்பட்டு வரும் விடயமாகும். ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இப் பள்ளிவாயலானது
ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் அமைந்திருக்கின்ற எல்லைக்குள் காணப்படுவதினால் இரண்டு ஜும்மா தொழுகைக்கான தேவைப்பாடு கிடையாது என்றும், இவ்வாறான செயலானது சமூகத்தினை பிளவுபடுத்தக் கூடியது என்றும் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நிருவாகம் பகிரங்கமாக ஹாரூன் சஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயலுக்கு கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றது.
அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் வாய்த்தர்க்க பிரச்சனையாகவும் மாறிய இவ்விடயமானது பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டு நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கும் கொண்டு செல்லப்படிருந்தனை நாம் சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடிய செய்தியாக இலங்கையில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பேசப்படுகின்ற முக்கிய விடயமாக மாறியிருகின்றது.
தொடர்ந்து ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவயல் நிருவாகத்தின் எதிர்பினை தாண்டி சுமார் 20 ஜும்மா தொழுகைகளை சாதாரனமாக ஏனைய பள்ளிவாயல்களில் இடம் பெறுகின்ற கொத்பாக்களை போன்றல்லாது சவூதி அராபியாவில் இடம் பெறுகின்ற கொத்பாக்களை போன்று தூர இடத்திலிருந்து வருகை தருகின்ற பிரயாணிகள், மற்றும் மனிதர்களுக்கு இருக்கின்ற ஏனைய அத்தியவசிய தேவைகளை கருத்தில் கொண்டு காலத்தின் தேவை கருதி நபியின் சுன்னா அடிப்படையில் குறுகிய நேரத்தில் முற்றிலும் தமிழ் மொழியில் குறித்த புதிய ஜும்மா பள்ளிவாயலில் கொத்பா பிரசங்கம் நடாத்தப்படுகின்றது.
மூன்று மாடிகளை கொண்ட இப் புதிய ஜும்மா பள்ளிவாயலில் ஒவ்வொரு கிழமையும் ஜும்மா தொழுகைக்காக மக்கள் அதிகரித்து கொண்டு வருகின்றமை ஒரு புறமிருக்க, ஜும்மா தொழுகையானது நெருங்குகின்ற வேலையில் தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட குறித்த பள்ளிவாயலுக்கு முன்பாக வீதி ஓரத்திலும் அதிகமானவர்கள் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவதானிக்க கூடியதாகவும் இருந்து வருகின்றது.
இவ்வாறு தொடர்ச்சியாக ஹாரூன் சஹ்வியின் புதிய பள்ளிவாயலில் பொலீஸ் பாதுகாப்புடன் ஜும்மா தொழுகையானது நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது ஓட்டமாவாடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் அமைந்துள்ள எல்லைக்குள் இரண்டு ஜும்மா தொழுகைகள் இடம் பெறுவதினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே குறித்த ஹாரூன் சஹ்வியினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயலில் இடம் பெறுகின்ற ஜும்மா தொழுகையினை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஃபத்துவாவாக எழுத்து மூலமான கட்டளையான ஒன்றினை கடந்த ஒரு கிழமைக்கு முன்பு அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்விக்கு அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் புதிய ஜும்மா தொழுகையினை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஃபத்துவா உடனான கட்டளையானது குர் ஆன் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருக்கின்றமையினால் அதனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி தள்ளியதாகவும், ஹாரூன் சஹ்வி கடைசியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் அனுப்பட்ட ஃபத்துவாவிற்கு பின்பு 19.02.2016 வெள்ளிக்கிழமை வழமை போன்று தனது புதிய பள்ளிவாயலில் பபரபரப்புக்களுக்கு மத்தியில் வழமைக்கு மாறாக அதிகப்படியான ஜும்மா தொழுகையாளிகளின் வருகையுடன் வாழைச்சேனை பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் ஜும்மா தொழுகையினை நடாத்தியதாகவும் கூறப்படுகின்றது. தனது கொத்பா பிரசங்கத்தில் கூட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் வழங்கப்பட்ட ஃபத்துவாவையும் அவர்களுடைய கட்டளையையும் பகிரங்மாக விமர்சித்த ஹாரூன் சஹ்வி, தான் இப் புதிய பள்ளிவாயலில் ஜும்மா தொழுகை நடாத்துவதினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென்று ஆணித்தரமாக தனது கொத்பா பிரசங்கத்தில் தெரிவித்தாக பிரதேசத்திலே பரவலாக பேசப்படுகின்றது..
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மீது பல குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக சுமர்த்தி உரையாற்றிய ஹாரூன் சஹ்வியின் குறித்த கொத்பா பிரசங்கமானது கல்குடா பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டும் விடயமாக அண்மையில் மாற்றமடைந்திருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் ஒரு தலைமை அமைப்பாக இருக்கின்ற அகிலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினை ஹாரூன் சஹ்வி தான் நிகழ்த்திய கொத்பா பிரசங்கத்தில் பகிரங்மாக விமர்சித்தமையானது முற்றிலும் பிழை என பரவலாக பிரதேச மக்களினால் பேசப்பட்டு வருகின்ற பேச்சின் உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு நேரடியாக அல்-கிம்மா நிறுவத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்வியினை அவருடைய நிறுவனத்தின் அலுவலகத்தில் சந்தித்த வேலையில் அவரிடம் தொடுக்கப்பட்ட முக்கிய கேள்விகளான…………
01-எதற்காக ஹாரூன் சஹ்வி அகிலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் வழங்கப்பட்ட ஃபத்துவா அடங்கிய கட்டளையினை மீறி புதிய ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையினை நடாத்தினார்.??
02- கொத்பா பிரசங்கத்தில் எதற்கான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பகிரங்கமக விமர்சிக்கப்பட்டது??
03- உங்களுடைய பார்வையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது பிழையான கொள்கையையா இந்த நாட்டு முஸ்லிம்கள் விடயத்தில் கடைப்பிடிக்கின்றது?
04- ஜும்மா தொழுகைக்கு எதற்காக ஒவ்வொரு கிழமையும் பொலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்படுகின்றார்கள்??
05- இப் புதிய ஜும்மா தொழுகை சம்பந்தமான பிரச்சனைக்கு பின்னால் ஏதும் அரசியல் பின்னணி இருக்கின்றதா??
06- நீங்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஃபத்துவாயினையும் கட்டளையினையும் மீறி ஜும்மா தொழுகை நடாத்தியமை சம்பந்தமாக இந்த பிரதேசத்தில், நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதனை கூற விரும்புகின்றீர்கள்??
போன்ற கேள்விகளுக்கு ஹாரூன் சஹ்வியினால் வழங்கப்பட்ட விடைகள் அடங்கிய கருத்துக்களின் விரிவான காணொளியானது எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜும்மா தொழுகை விடயமானது இஸ்லாத்தில் முக்கிய இபாதத்தாக கருதப்படுகின்ற நிலையில் மார்க்க விடயத்தில் மிகச்சரியான முடிவினை பகக்சார்பிலாமல், அரசியல், புறச்சூழல் காரணிகள், தனி நபர்களின் விருப்பதாபங்களை என்பவைகளை புறம் தள்ளி இறைவனுக்கு பயந்தவர்களாக முஸ்லிம்களின் இறுதித் தூதர் றசூலே கரீம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையின் அடிப்படையில் மிகவும் நிதானமாக குறித்த பிரச்சனைக்கான முடிவினை மக்களாக நீங்கள் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனே இச்செய்தியினை இணைய வாசகர்களாகிய உங்களுக்கு இங்கே பதிவெற்றம் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.

Leave a comment