ஜேர்மனியில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை

Maithiri in germanyபேர்லின்: ஜேர்மனிக்கான மூன்று நாட்கள் அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்நாட்டு சான்சலர் ஏங்கலா மேர்க்கலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவ அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக, பொருளாதார மற்றும் இராஜீய உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துயாரைடப்பட்டதாக அந்த பிரிவின் தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Maithiri in germany

ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

Published by

Leave a comment