Category: Your Kattankudy
-
அப்ரிடி
விசாலமான விளாசல்களுக்கு விலாசம் தந்தவன் இவன் இறங்கி விட்டால் பந்தா இருக்காது. பந்தும் இருக்காது.
-
ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு 25-03-2016 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி-01 றிஸ்வி நகரில் இடம்பெறவுள்ளது.
-
கடைசி பந்தில் வங்கதேச அணியை வென்றது இந்தியா
பெங்களூரு: உலகக் கோப்பை டி 20 போட்டியில் இன்று வங்கதேச அணியை இந்திய அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வென்றது.கடைசி பந்து வரை இந்தப் போட்டியில் எத்தரப்புக்கு வெற்றி என்பது ஊசலாட்டமாகவே இருந்தது.
-
வடமத்திய மாகாணத்தில் வாழும் மக்களை பாதித்துள்ள ஒருவகை மர்ம சிறுநீரக நோய்!
பொலன்னறுவை: அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில ரசாயனங்கள் தான் காரணம் என்று நிலவிவரும் வாதத்தை மறுதலிக்கும் விதத்தில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி கல்விக் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இம்முறை வெளியான 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி,ஏறாவூர்,ஒட்டமாவடி உள்ளிட்ட மூன்று கல்விக் கோட்டங்களிலுமுள்ள பாடசாலைகளில் அதிகமாக 30 மாணவ,மாணவிகள் 9ஏ சித்தியை பெற்று காத்தான்குடி பிரதேசத்திற்கும்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் ,காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
-
கிழக்கில் – க.பொ.த சா பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ற் பாடசாலை மாணவிகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணத்திலும் மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவடத்திலும் முதலிடத்தை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. ராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.
-
கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும்
டோஹா: கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும்.
-
சந்திர கிரகணம் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ இலங்கை வானிலை அவதான நிலையத்தின் 2016ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, எதிர்வரும் 23.03.2016 புதன்கிழமை மாலை சந்திர கிரகணம் தோன்றவுள்ளதாகவும் அதனை இலங்கையில் பார்க்கமுடியும் என்றும் அறிவித்துள்ளது. இக்கிரகணமானது அன்றைய தினம் மாலை சந்திரன் உதிப்பதற்கு முன்னர் ஆரம்பமாகின்றது. இதன் உச்சநேரம் மாலை 06.20 மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
2015ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் வாழ்த்துச்செய்தி
காத்தான்குடி: கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்விகற்பதற்கு தெரிவான மாணவர்கள் தமது பிரிவில்சிறந்த முறையில் படிப்பினை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திட்கு தெரிவாகி இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், சிறந்த சேவைகளை வழங்கி அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கட்டாரில் “கல்முனை மாநகரம்” உள்ளூராட்சியும், சிவில் நிருவாகமும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீடு
டோஹா: கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் (Gulf Federation for Kalmunai – GFK) ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய “கல்முனை மாநகரம்” உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும் எனும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி மாலை 6:00 மணியளவில் கட்டார் டோஹாவில் அமைந்துள்ள பிரண்ட்ஸ் கல்ச்சரல் சென்டரில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
-
பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
கடந்த வருடம் நடைபெற்ற க.பெ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்தார்.
-
இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார்
இலக்கம் 28/28, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்து வரும் அப்துல் ஹமீத் (தாஹிர்) என்பவரின் மனைவி ஏ.டப்ளியூ உம்மு ரஸீனா இருதய நோயால் (coronary artery disease) பீடிக்கபட்டுள்ளார். அவசரமாக சத்திரசிக்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 5,75000 ரூபா தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளனர்.