காத்தான்குடி: கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்விகற்பதற்கு தெரிவான மாணவர்கள் தமது பிரிவில்சிறந்த முறையில் படிப்பினை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திட்கு தெரிவாகி இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், சிறந்த சேவைகளை வழங்கி அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில்,
இச்சாதாரணதர பரீட்சையில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் இருந்து சிறந்த சித்தியுடன் பல மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்க கூடிய விடயமாகும். இவ்வாறு சித்தியடைந்து உயர் கற்கைநெறிகளுக்கு தெரிவாகிய அனைத்து மாணவமாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள்,அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாகமகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போன்று ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர கற்கைகளுக்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும், அதே நேரம் இப்பரீட்சையில் சித்தி அடையாத அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமலும், கல்வியை இடைநடுவில் விட்டுவிடாமலும் மீண்டுமொரு முறை முயற்சி செய்து, முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கமைய அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்றுஉயர்கல்வியை தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும்,பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பததோடு, ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுதெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாக மிக்க மாகிழ்ச்சி அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
செய்தியாளர்
எம்.ரீ. ஹைதர் அலி
(ஊடக இணைப்பாளர்)
Leave a comment