சந்திர கிரகணம் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்

moon (2)அன்புடையீர், ​அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

இலங்கை வானிலை அவதான நிலையத்தின் 2016ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, எதிர்வரும் 23.03.2016 புதன்கிழமை மாலை சந்திர கிரகணம் தோன்றவுள்ளதாகவும் அதனை இலங்கையில் பார்க்கமுடியும் என்றும் அறிவித்துள்ளது. இக்கிரகணமானது அன்றைய தினம் மாலை சந்திரன் உதிப்பதற்கு முன்னர் ஆரம்பமாகின்றது. இதன் உச்சநேரம் மாலை 06.20 மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் கிரகணங்கள் தோன்றும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பின்பற்றப்பட்ட அமல்களைப் புரிவது ஸூன்னாஹ்வின் அடிப்படையில் நம்மீது கடமையாகவுள்ளது. எனவே எதிர்வரும் 23.03.2016 புதன்கிழமை மாலை நிகழவுள்ள சந்திரகிரகணத்தையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பின்வரும் இபாதத்களை ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் 23.03.2016 புதன்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் சந்திர கிரகணத்தொழுகையும் குத்பாவும் இடம்பெறவுள்ளது.

எனவே, அன்றைய தினம் ஆர்வமுள்ள சகல பொது மக்களும் பள்ளிவாயலுக்கு சமூகமளித்து, மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பாகவுள்ள கிரகணத் தொழுகையில் கலந்து கொண்டு, றஸூல் (ஸல்) அவர்களின் இம்முன்மாதிரியான அமல்களைப் புரிந்து, அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தருமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்,
ஜம்இய்யதுல் உலமா.
காத்தான்குடி.

Published by

Leave a comment