அப்ரிடி

afridiவிசாலமான
விளாசல்களுக்கு
விலாசம் தந்தவன்

இவன்
இறங்கி விட்டால்
பந்தா இருக்காது.
பந்தும் இருக்காது.

ஆறுதலை
அறியாதவன்.
ஆறு ஆறாய்
எழுதலைப் பார்க்க,
இலக்கை
எட்டுதலைப் பார்க்க,
ஒரு தலை போதாது.

நான்கும் ஆறுமே
நன்கு அறிந்த
நம்பர்களாயின
நண்பர்களாயின
இவனால்.

தேசங்களைக் கடந்தும்
நேசங்களின்
கோஷங்கள் ஒலிக்கும்
பூம் பூம் என்று.

கிரிக்கட்டில்
அவனைப் பார்ப்பதிலும்
அவனுக்காக
கிரிக்கட்
பார்ப்பவர்கள்
பலர்

afridi

பூம் பூம் ஒலிக்க
புயல் தொடங்குவதும்
கிராப்
கிறுக்குத் தனமாய்
கீழிருந்து மேல் போவதும்
இனி
இல்லை என்பது
இலேசாக வலிக்கிறது.

நீயில்லா
மைதானம்
வாயில்லா
வைரமுத்து

ஆச்சரியப்படுத்திய்
சில நேரம்
ஆவேசப் படுத்திய
அதிரடி
சரவெடி
அப்ரிடியே,
சாதனை நாயகனே,
நீ
‘சா’ தனை அடைந்த பின்னும்
உலகம்
உன் பெயர் சொல்லும்.

  • முகமட் நிஷவ்ஸ்

Published by

Leave a comment