லண்டன் ‘மெடேம் துஷாட்ஸ்’டில் மோடிக்கு மெழுகுச் சிலை

modi-wax-statueலண்டன்: லண்டனிலுள்ள புகழ்பெற்ற மெடேம் துஷாட்ஸ் மெழுகு உருவச்சிலை அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை உருவாக்க பல மாதங்கள் ஆனது. வணக்கம் கூறுவது போல நிற்கும் இந்தச் சிலையிலும் அவர் வழக்கமாக அணியும் குர்தாவும் உள்ளது.

பராக் ஒபாமா, வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச்சிலை இருக்கும் பகுதியில் மோடியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

modi-wax-statue

இருபது கலைஞர்கள் நான்கு மாதங்களாக 150,000 பவுண்டுகள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அவரது சிலையை செதுக்கியுள்ளனர் எனவும் மெடேம் துஷாட்ஸ் தெரிவித்துள்ளது. அவரது சிலை திறந்துவைக்கப்பட்ட சமயத்தில் அங்கிருந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள, அதைப் பார்த்து மிகவும் உற்சாகமடைந்தனர் என துவக்கவிழாவுக்கு சென்றுவந்த செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், சச்சின் டெண்டூல்கர், இந்திரா காந்தி உட்பட பல இந்தியப் பிரபலங்களின் மெழுகுச் சிலை ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

modi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s