ஐடியாவை விட
ஐடியே நோக்கப்படும்
ஆக்கத்துக்கு லைக் இட.
கொமன்ட்ஸ்களுடன்
குறுகிப் போனது
மரணத் துயர்.
பிரண்ட்ஸ் என்பது
பின்னூட்டத்துக்காகவே
பேணப் பட்டு
ஈனப் பட்டது.
தாயாரை விட
செயாரை விரும்பும்
துயரம் இங்கு
சங்கை குறைத்து
சங்கு ஊதுவதற்கென்றே
சங்கம் அமைக்கும்
அசிங்கம் இங்கு.
விலகி விட வேண்டுமென
பல தடவை நினைத்தாலும்
இலகுவில் விலகாது
ஈயைப் போல் மொய்க்கிறது
முக நூல்.
ஊரறிய நட்புப் பேணி
நேரடியாக் காணும் வேளை
யாரோ போல் இருப்பதுதான்
தீராத பேஷ் புக் நட்பு
- முகமட் நிஷவ்ஸ்
Leave a comment