அதிக வெப்பம்: வடமத்திய மாகாண பாடசாலைகள் 12 மணி வரை

sunகொழும்பு: வடமத்திய மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக வடமத்திய மாகாண பணிப்பாளர் திருமதி ஈ.எம்.என்.டப்ளியூ. ஏகநாயக்க தெரிவித்தார். அதிக வெப்ப காலநிலை நிலவுவதன் காரணமாகவே குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் 12 மாணவர்கள் மயக்கமுற்று வீழ்ந்தமையே இம்முடிவுக்கான முக்கிய காரணம் என தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) முதல், மறு அறிவித்தல் வரை வட மத்திய மாகாகண பாடசாலைகளை 12.00 மணியுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று (29) பி.ப. 2.00 மணியளவில் அநுராதபுரத்தில் 36 செல்சியஸ் வெப்பநிலையும், பொலன்னறுவையில் 34 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் உஷ்ண காலநிலை நீடிக்கின்றதோடு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 38 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பில் இன்றைய வெப்பநிலை 33 பாகை செல்சியஸாக பதிவாகியிருந்ததோடு, யாழ்ப்பாணத்தில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

Published by

Leave a comment