சமகாலத்தில் அல் குர்ஆனுடைய பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கி வரும் அல்பத்ர் இஸ்லாமிய நிறுவனம் தனது மற்றுமொரு பணியாக எமது வாலிபர்களின் மார்க்கக் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு இரண்டு வருடகால ஷரீஆ கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளது.
பாடசாலைக் கல்விக்கோ ஏனைய பிரத்தியேக வகுப்புக்களுக்கோ தடையில்லாமல் 15 பேர் கொண்ட துறைசார்ந்த அறிஞற் குழுவால் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கற்கைநெறிக்காக முதற்கட்டமாக பாடசாலையில் தரம் 08 மற்றும் தரம் 09 இல் கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்படவுள்ளனர்.
வியாழன் வெள்ளி தவிர்நத ஏனைய நாட்களில் மாலை 06 மணி தொடக்கம் இரவு 08.30 மணி வரை நடைபெறவுள்ள இக்கற்கை நெறியில் அறபு மொழி, தப்ஸீர் (அல் குர்ஆன் விரிவுரை), ஹதீஸ் விரிவுரை, தஜ்வீதுல் குர்ஆன், பிக்ஹ் (இஸ்லாமிய சட்டக்கலை), இஸ்லாமிய வரலாறு போன்ற பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதுடன் காலத்தின் தேவைக்கேற்ற அறிவுகளும் வழங்கப்படவுள்ளது.
அல் குர்ஆன் மீதும் அஸ்ஸுன்னா மீதும் விருப்பம் கொண்ட நல்ல பண்பாடும் கொள்கையும் உடைய சிறந்த வாலிபர்களை உருவாக்கல் என்ற மாபெரும் நோக்கோடு ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாடநெறியில் இணைய வரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர் வரும் 05ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கவும். விண்ணப்பங்களை புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் காரியாலயத்தில் மாலை 04 மணி தொடக்கம் இரவு 07 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a comment