கடற்பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவக்கூடும்

wind air seaமட்டக்களப்பு: நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் நிலவிய தாழமுக்க மண்டலம் , நாட்டை விட்டு விலகி நாட்டின் வடபகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சுற்றி கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று விட்டு விட்டு வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் ஆகையால் கடற்பகுதி ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக , மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை , மழையுடன் கூடிய காலநிலை சிறிதளவு குறைவடைந்துள்ள போதும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் காணப்படும் எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment