ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி

usa attackஒர்லாண்டோ: அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறது.

usa attack

Published by

Leave a comment