கொழும்பு: ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் நீண்ட நேரமாக மாளிகையின் முன்பாக காத்திருந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை கடந்த 6ஆம் திகதியிலிருந்து மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி திறந்து விடப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.தினமும் பெருந்திரளான மக்கள் ஜனாதிபதி மாளிகையின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்காகவும், அதன் தன்மையை பார்வையிடுவதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாகவுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி வரை இந்த மாளிகை மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment