Category: Your Kattankudy
-
பொது பல சேனா தடை செய்யப்பட வேண்டும்??-ஒட்டு மொத்த சிங்கள சமூகத்தையும் தவறாக எடை போடுவது தவரு- ஜுனைட் நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொது பல சேனா தடை செய்யப்பட வேண்டும். ஒட்டு மொத்த சிங்கள சமூகத்தையும் தவறாக எடை போடுவது தவறாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பொறுப்பாளர் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.
-
தேசத்துக்கு மகுடம்: 4 நாட்களில் 10 இலட்சம் பேர் பார்வை நேற்று மட்டும் 5 இலட்சம் பேர் வருகை
அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவன வளாகத்தில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை பார்வையிட நேற்றைய தினம் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.
-
சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்படும் இலவச தொலைத்தொடர்பு மென்பொருட்களும் அவற்றுக்கான காரணங்களும்…
-MJ றியாத்: உலகப் புகழ்வாய்ந்த சமூக வலைத்தளங்களில் இன்று பிரதானமாகத் திகழும் ஸ்கைப் (Skype), வைபர் (Viber) மற்றும் வட்ஸ்அப் (Whatsapp) ஆகிய இலவச தொடர்பாடல் மென்பொருட்களின் சேவைகளை சவூதி அரேபியா ஒரு வாரத்துக்குள் தடைசெய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
-
ஓ.எஸ்.ஏ அமைப்பினால் விதவைகளுக்கு இலவசமாக குளாய்க் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ‘ஏழை மக்களின் வளமான வாழ்விற்கு வழிகோலுவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கணவனை இழந்த விதவைகளுக்கு இலவசமாக குளாய்க் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி பஸ் டிப்போவுக்குள் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மஸ்ஊத் (ஹாஸிமி) தெரிவித்தார்.
-
மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29.03.2013 பிற்பகல் 04.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவின் சிரேஸ்ட உறுப்பினரும் மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஸ் ஸெய்க் ஸைனுல் ஆப்தீன் (மதனி) தெரிவித்தார்.
-
ஈச்ச மரத்து இன்பச் சோலையில்..
(படங்கள் FM. பர்ஹான்) காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டிருக்கும் ஈச்ச மரங்கள் தற்பொழுது காய்க்கத் தொடங்கி இருக்கின்றன. அவற்றின் அழகிய தோற்றத்தின் மேலதிக படங்களை எமது வெளியூர் மற்றும் கடல் கடந்து வாழும் அன்பு வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.
-
சஊதியில் தீ விபத்து: 7பேர் பலி!
-MJ றியாத்: றியாத் நகலிரிருந்து 750 கி.மீ தூரத்திலிருக்கும் ஆயான் எனும் ஊரில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் 7 இந்தியர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா, மலையாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
கடந்த 50 வருடங்களுள் பிரித்தானியாவில் தொடரும் மிக மோசமான குளிர் காலநிலை: இயல்புநிலை பாதிப்பு!
பிரித்தானியா: பிரித்தானியாவின் நேரக்காட்டி (கலண்டர்) காலத்தின்படி தற்பொழுது இலைதுளிர் காலம் (Spring) ஆரம்பித்திருக்கின்றது. கடந்த 3 மாதங்கள் உறைபனியில் மோசமான காலநிலையைச் சந்தித்து வெயிலுக்காக் காத்திருக்கும் இந்த மார்ச் மாத முடிவிலும் அங்கு வெயில் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். கடுமையான குளிரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
-
211 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 211 பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களும், காணி உறுதிப்பத்திரமற்ற 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரமும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
-
15 வயதுக்கு குறைவான மாணவர்கள் மரதன் ஓடுவதற்கு அரசு தடை
அமைச்சரவை அங்கீகாரம்: விளையாட்டுத்துறை மருத்துவப்பிரிவு நேற்று உத்தியோகபூர்வ அறிவிப்பு பதினைந்து வயதுக்குக் குறைவான மாணவர்களை மரதன் போட்டிகளிலோ கிராமங்களினூடாக ஓடும் போட்டிகளிலோ ஈடுபடுத்துவதை தடை செய்துள்ளதாக விளையாட்டு மருத்துவ பிரிவு தெரிவித்தது.
-
தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அம்பியுலன்ஸ் வண்டி கையளிப்பு
காத்தான்குடி: தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வழங்கிவைக்கபட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித்தரும் ஈத்த மரங்கள் காய்க்க ஆரம்பித்துள்ளன
– டீன் பைரூஸ். காத்தான்குடி: அரேபிய மண்ணுக்க அழகை கொடுப்பதில் ஈத்த மரங்களின் பங்கு கனிசமானது. அவ்வாறுதான் காத்தான்குடி மண்ணுக்கும் அப்படியான ஈத்த மரங்கள் அழகை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.