Category: Your Kattankudy
-
காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு ஈரானிலிருந்து மாபிள்கள் இறக்குமதி-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீதியை அழகுபடுத்தும் விஸேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி குட்வின் சந்தி குர்ஆன் சதுக்கமாக மாற்றம் பெற்று வருகின்ற அதே வேளை அங்கு பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) நிறுவப்பட்டு வருகின்றது.
-
யூ.எல்.எம்.என்.மூபீனின் வேண்டுகோளின் பேரில்; ஆறு பேருக்கு சமாதான நீதவான் நியமனம்
FM. பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீன்.BA/JP வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட மூன்று அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக்கடிதமும் மூன்று மட்டக்களப்பு நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின்;…
-
சம்பூரில் இன்று 139 குடும்பங்கள் மீள்குடியேற்றம்
-பஹ்மியூஸூப் திருகோணமலை: சம்பூர், நவரட்ணபுரம் மற்றும் கூனதீவு ஆகிய பகுதிகளில் 139 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 25.03.2013 திங்கட்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதாக 224வது படைபிரிவு தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை அல்மின்ஹாஜ் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை அல்மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் ஜீ.டீ. இக்பால் தலைமையில் பாடசாலை மைதானத்தில் பலத்த வளப்பற்றாக்குறைக்கு மத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
-
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு
-பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை என்பன இன்று (25.03.213) காலை வழங்கிவைக்கப்பட்டது.
-
‘கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள்’ புத்தக வெளியீடு!
– ரைஸ் கிண்ணியா: ‘கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள்’ நூல் வெளியீடு நேற்று கிண்ணியா பொது நுலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.முஸம்மில் தலைமையில் நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி வருகை தந்திருந்தார்.
-
தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலைக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் புதிய பஸ் வண்டி வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலைக்கு பொதுமக்களின் நலன்கருதி புதிய பஸ் வண்டியொன்று இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-
எல்.ரீ.ரீ.ஈ. இன் மனித மாதிரி வடிவங்களை காட்சிக்கூடங்களாக கொண்டுள்ளது-தெயட கிருளவில் நீதியமைச்சு
-பழுளுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: ஏழாவது ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி அம்பாரை நகரில் கோலாகலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சனிக்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நீதியமைச்சின் காட்சி கூடத்தை அங்கு சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமத், மாகாண சபை உறுப்பினர் நசீர் ஆகியோரும் ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் அமைச்சருடன் வருகை தந்தனர். அவர்களை அடுத்து பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்…
-
அரசியல் அழுத்தங்களையும் மீறி இன்றைய ஹர்த்தால் இலங்கை முஸ்லீம்களுக்கு பாரிய வெற்றி!
– விசேட நிருபர் காத்தான்குடி: இன்று திங்கட்கிழமை இலங்கை முஸ்லீம்களால் ஒன்றிணைந்து, பொது பல சேனா மற்றும் இவ் இயக்கத்தை ஊக்குவிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால்-கடையடைப்பு சிறப்பாக வெற்றியடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
முஸ்லிம் மக்களை குழப்புவதற்காக சில நாசகார சக்திகள் எமது கருத்துக்களை திரிபுபடுத்துகின்றனர்- மௌலவி எம்.எம்.இர்பான்
-பழுளுல்லாஹ் பர்ஹான் ‘முஸ்லிம் மக்களை குழப்புவதற்காக சில நாசகார சக்திகள் எமது கருத்துக்களை திரிபுபடுத்துகின்றனர்’ என அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபையின் பொறுப்பாளர் மௌலவி எம்.எம்.இர்பான் தெரிவித்தார்.
-
கல்முனையில் பூரண கடையடைப்பு ஹர்த்தால்
-பழுளுல்லாஹ் பர்ஹான் அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமையினை கண்டித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் இன்று (25.03.2013) கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்றது.
-
இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ் நிலையை கண்டிக்கும் வண்ணமும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டுக்கு ஏதிர்ப்புத் தெரிவித்தும் கிழக்கில் ஹர்த்தால்
கண்டன கடையடைப்பு -இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ் நிலையை கண்டிக்கும் வண்ணமும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டுக்கு ஏதிர்ப்புத் தெரிவித்தும் நாடு தழுவிய ரீதியிலும் ,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்றது.