Category: Your Kattankudy
-
தென் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச பேச்சாளர் அப்துல் பாஸித்தின் விசேட உரை தற்போது காத்தான்குடியில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தற்காலத்தில் நவீன விடயங்களை அல்லாஹ்வின் உதவியினால் மிக சிறப்பாக எடுத்துரைக்கும் தென் இந்தியா, சென்னையைச் சேர்ந்த இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
-
முஸ்லிம்களை நசுக்க முயலும் மதத்தீவிரவாதமும் சமூக உணர்வுகளுக்கு எதிரான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும்
PMGG நகர சபை உறுப்பினர்களின் கண்டன தீர்மானத்தை காத்தான்குடி நகரசபை மறுப்பு PMGG ஊடகப் பிரிவு: காத்தான்குடி: இந்நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வு மற்றும் இனவாத பிரச்சார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாக முஸ்லிம்களின் மத கலாச்சார உரிமைகள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களின் தனித்துவ மத கலாசார அம்சங்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளாகவே இந்த இனவாத வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் அமைந்திருப்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. இந்த நிலைபற்றி முஸ்லிம்கள் மாத்திரமன்றி…
-
‘பொது பல சேன’, ‘ சிங்கள ராவய’ துவேசங்களைப் பரப்பி முஸ்லிம்களின் உணர்வுகளைக் குத்திப்பார்க்கின்றனர்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
கொழும்பு: 30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னா பின்னமான இலங்கைத் திரு நாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத சில தேச விரோத சக்திகள் நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும் அதல பாதாளத்துள் தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
-
‘பெஷன் பக்’ தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்: ஹூனைஸ் எம்.பி
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பின் புற நகர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘பெஷன் பக்’ நிறுவனத்தின் ஆடை களஞ்சிய சாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட தக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் அவர்களை ஆஜர்படுத்தி அதற்கான தண்டனையினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.
-
பொரலஸ்கமுவ பெபிலியானவில் ‘பெஷன் பக்’ மீது குண்டர்கள் கும்பல் தாக்குதல்!
விசேட செய்தியாளர் கொழும்பு: பொரலஸ்கமுவ பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (FASHION BUG) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது வியாழன் இரவு 7.45 மணியளவில் குண்டர்கள் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை
– ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் -FM. பர்ஹான் கொழும்பு: தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.
-
த.ம.வி.பு புதிய தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
-
முஸ்லிம்களே! ஜாக்கிரதையாக இருங்கள்!
– பழுளுல்லாஹ் பர்ஹான் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரு சின்னங்களும் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் அவற்றை நன்றாக உற்று நோக்கினால் இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
-
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது – அமைச்சர் ரஊப் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.
-
சவூதியின் புதிய வேலைவாய்ப்புக் கொள்கை: வெளிநாட்டினருக்கு பாதிப்பு!
-MJ றியாத்: சவூதி அரேபியா அரசின் புதிய கொள்கையால் அங்கு பணிபுரியும் ஏராளமான வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் அதிகமாக இந்தியர்களும் ஏனைய நாட்டினர்களுமே அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.
-
தமிழகத்துக்கு பயணத்தடை விதிக்க கோருகிறது ஹெல உறுமய
கொழும்பு: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு யாரும் செல்லமுடியாதபடி, பயணத்தடையை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
-
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.லெத்தீப் JP (அலி சப்ரி) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
– விசேட நிருபர். காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம். அலிசப்ரி .JP இன்று மாலை காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி பரீட் நகர் பள்ளிவாயல் சந்தியில் வைத்து கல், மண் ஏற்றி தொழில் புரியும் சிபான் என்பவர் தனக்கு தகாத வார்த்தைகளால் ஏசி தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.