Author: yourkattankudy.com
-
நவநீதம்பிள்ளையைச் சந்திக்காமல் தலைமறைவாகும் முஸ்லிம் தலைமைகள்!
ஏ. இனாமுல்லாஹ், கொழும்பு கொழும்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்பொழுது இலங்கையில் வருகை தந்திருக்கின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களை நேரில் சென்று சந்தித்து, தங்களது பிரச்சினைகளையும், தேவைகளையும் அறிந்து, அதற்கான ஆவனத்தையும் அறிக்கையையும் விரைவில் ஐ.நா மனித உரிமை அமைப்பிடம் சமர்ப்பிப்பார்.
-
‘கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்
-
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் கைது
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
இனவாத செயற்பாடுக்கு காத்தான்குடி சம்மேளனம் கண்டனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இனவாத செயற்பாடுகளைக் கண்டிப்பதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்க்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.எம். ஹாலித் மற்றும் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம். றமீஸ் ஜமாலி ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ளனர்.
-
கல்முனை முதல்வர் மற்றும் கிழக்கு ஆளுநருக்கிடையிலான சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரமவினை நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது மாநகர சபையின் நிதிக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறகத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
ஹஜ்ஜுக்காக நான்கு லட்சம் என அறிவித்திருந்தும் அது நடைமுறையில் இல்லை-அதிகமாக அறவிடப்படுகிறது
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஹஜ்ஜுக்காக நான்கு லட்சமே ஹாஜிகள் கட்டணமாக செலுத்த வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் பௌசி கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வரவேற்பதுடன் இக்கட்டன அறிவுப்பு என்பது நடைமுறையில் காண முடியாதுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
-
சாவின் விளிம்பில் மைக் டைசன்: ‘சாக விரும்பவில்லை.. வாழ விரும்புகிறேன்….’
– OiT லண்டன்: முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக்டைசன் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், தான் சாக விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்குப் பேர் போனவர் மைக் டைசன். காதைக் கடித்தார், கற்பழித்தார் என இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்த ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர் விடுதலை பெற்ற பின்னர் போதை மருந்துகளுக்கு அடிமையானார்.
-
எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம்: சிரியா எச்சரிக்கை
டமஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
-
விடுதலைப்புலிகளுக்கு வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை
கொழும்பு: விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது.
-
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விளிப்புணர்வு செயலமர்வு கிண்ணியா நகரபிதா தலைமையில்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபையானது கடற்கரை பாதுகாப்பு திணைக்கத்துடன் இணைந்து செயற்படுத்தும் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் சம்பந்தமான செயலமர்வுக் கருத்தரங்கு இன்று 29.08.2013 நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சட்டத்தரணி தலைமையில் இடமபெற்றது.
-
கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப் பிரதேச மீன் சந்தைகளுக்கு திடீர் விஜயம்
– ரைஸ் கிண்ணியா: வெளியிடங்களிலிருந்து விற்பனைக்காக கிண்ணியாவுக்கு கொண்டுவரப்படும் மீன்கள் அனைத்தையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் திடீர் நடவடிக்கை கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நேற்று இடம்பெற்றது. மீன் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக நகரபிதா விஜயம் செய்து பார்வையிட்டதோடு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
-
தீயில் கருகிய வர்த்தக நிலையம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளம் நகரில் இன்று( 2013.08.29) அதிகாலை 1.30 மணியளவில் வர்த்தக நிலையமொன்று முழுமையாக தீயில் கருகியதுடன். அதனை அணைக்கச் சென்ற 3 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளர்.