கிண்ணியா: கிண்ணியா நகரசபையானது கடற்கரை பாதுகாப்பு திணைக்கத்துடன் இணைந்து செயற்படுத்தும் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் சம்பந்தமான செயலமர்வுக் கருத்தரங்கு இன்று 29.08.2013 நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சட்டத்தரணி தலைமையில் இடமபெற்றது.
இதன்போது செயலமர்வினை ஆரம்பித்து வைத்த கிண்ணியா நகரபிதா ‘கிண்ணியாவில் நடைமுறைப்படுத்தும் திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு விளிப்புணர்வு வழங்க வேண்டியது அவசியமாகவுள்ளது. அத்துடன் இந்த நகரசபை செயற்படுவதானது மக்களினது பங்களிப்பிலிருந்துதான்.
இவற்றை முழுக்க முழுக்க நம்பியிருந்து இச்சசபையின் மக்களுக்கான செயற்பாடுகளை நடத்த முடியுமென்பது சாத்தியமற்றது. ஆகவே திண்மக்கழிவு சம்பந்தப்பட்ட விடயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரசபைக்கான வருமானத்தை அவற்றின் மூலமாக பெற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதார சுமையினை மக்களிடமிருந்து குறைக்க முடியும்.
இவற்றை செயற்படுத்தவே சின்னத்தோட்டத்தில் நகரசபைக்கு சொந்தமான இடத்தில் கழிவுகளை சேகரித்து அவற்றினை பசளையாக்குவதும் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றோம். இவற்றிற்கு கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றது. அத்தோடு மக்களிடமிருந்து கழிவுகளை விலைக்கு வாங்கி அவற்றை பயனுள்ளதாக மாற்றுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமக்கான வாகன பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு இத்திணைக்களம் அதற்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கின்றது’ எனத் தெரிவித்தார்.
இவ்விளிப்புணர்வு செயலமர்விற்கு நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், சீசீடி திரு.சந்தன, சிவகுமார், கிண்ணியா நகரசபைக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், கொமியுனிடி சென்றர் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![DSC03898[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc038981.jpg?w=150&h=112)
![DSC03903[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc039031.jpg?w=640&h=480)
![DSC03898[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc038981.jpg?w=640&h=480)
Leave a comment