Author: yourkattankudy.com
-
போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு அவற்றை விநியோகம் செய்தது தொடர்பில் இரு இளைஞர்கள் கைது!
இர்ஷாத் றஹ்மத்துல்லா சிலாபம்: போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு அவற்றை விநியோகம் செய்தது தொடர்பில் இரு இளைஞர்களை மாதம்பை பொலீஸார் சிலாபம் முகுதுவட்டவன பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் வசம் இருந்த 2 அச்சிடப்பட்ட போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் (S6178122) அச்சிட பயன்படுத்திய கணணி இயந்திரம் என்பனவற்றை பொலீஸார் மீட்டுள்ளனர்.
-
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தமட்டில் 2004ம் ஆண்டுக்கு பிற்பாடுதான் ஓரளவு கல்வியின்பால் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள் – இதை நாங்கள் ஊக்கப்படுத்துவதன் மூலம் ஓர் தலை சிறந்த முஸ்லிம் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமூகத்தை பொறுத்தமட்டில் 2004ம் ஆண்டுக்கு பிற்பாடுதான் ஓரளவு கல்வியின்பால் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள் இதை நாங்கள் ஊக்கப்படுத்துவதன் மூலம் ஓர் தலை சிறந்த முஸ்லிம் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற மில்லத் முன்பள்ளி பாலர் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
BBS எனப்படும் பொதுபலசேனாவின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான முன்னோடி நடவடிக்கை: புலம்பெயர் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான SLMDI UK அமைப்பின் பகிரங்க அழைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் லண்டன்: சுமார் முப்பது வருட காலமாக நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் நடைபெற்று வந்த கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் நான்கின மக்களும் இன, மத, மொழி பேதங்களை மறந்து ஓர் தாய் பிள்ளைககளாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வருகின்ற வேளையில் இந்நாட்டிற்கும், இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் மற்றுமொரு சாபக்கேடாக பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, ராவண பலய என்னும் பெயர்களைக் கொண்ட சில பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும்,…
-
பாகிஸ்தான் அணித்தலைவராக நீடிக்கும் மிஸ்பா: காத்திருக்கும் ஆமிர்..!
லாஹூர்: அடுத்த ஐ.சி.சி உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன்போது பாகிஸ்தான் அணியின் தலைவராக 40 வயதை நெருங்கும் மிஸ்பா உல்-ஹக் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.
-
கருப்புப் பெட்டி ஒலி அடங்கியது: இனி மாயமான விமானத்தை தேடுவது மிகவும் கடினம்!
S-90 பேர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிகள் அடங்கிவிட்டதால் இனி விமானத்தை தேடும் பணி கடிணமாகிவிட்டது. கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.எச். 370 மாயமானது. இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசியா அறிவித்தது. இதைத் தொடர்ந்து…
-
மாயமாவதற்கு முன் நடுவானில் செல்போனில் பேச முயற்சித்த துணை விமானி
SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனில் யாருடனோ பேச முயற்சித்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜீங் சென்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. மாயமான விமானம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
-
வின்ஸிஸ்ட் நெட் வேர்க் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
றிஸ்கான் முகம்மட் வின்ஸிஸ்ட் நெட் வேர்க் ஒழுங்கு செய்திருந்த ‘ இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் ‘ எனும் தொனிப் பொருளிலானான, இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் இலகுவாக தொழில் வாய்ப்பினை அல்லது சுயதொழிலினை மேற்கொள்ளும் வகையில் 4நாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று அன்மையில் வின்ஸிஸ்ட் நெட் வேர்க் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
-
பாலர் பாடசாலைகளின் ‘மாபெரும் ஆக்கத்திறன் கண்காட்சி- 2014’ 2ம் நாள் நிகழ்வை PMGGயின் சூறாசபை உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆரம்பித்துவைத்தார்
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம சேவைப் பிரிவைச் சேர்ந்த பாலர் பாடசாலைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மாபெரும் ஆக்கத்திறன் கண்காட்சி- 2014’ யின் இரண்டாம் நாள் அங்குரார்ப்பண நிகழ்வினை காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மறிச்சிக்கட்டிக்கான 2வது விஜயம்
PMGG ஊடகப்பிரிவு மன்னார்: மன்னார் – மறிச்சிக்கட்டி பிரதேசத்திற்கான இரண்டாவது விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபையினர் நேற்று (11.04.2014) மேற்கொண்டனர். மறிச்சிக்கட்டி பிரதேசத்திற்கு பொது பல சேனா அமைப்பினர் சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்ததன் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காகவும் அத்தோடு இம்மக்களுக்கான நிரந்தரத்தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கேற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாககவுமே NFGG யின் இவ்விஜயம் அமைந்திருந்தது.
-
104 வருடங்களுக்குப்பின் மீண்டும் புறப்பட தயாராகிறது புதிய டைட்டானிக்! சுவாரஸ்ய தகவல்கள்…
– S-90 பீஜிங்: உலக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த டைட்டானிக் கப்பலின் மாதிரியிலேயே டைட்டானிக் – 2 என்ற புதிய சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க அதிபரான கிளைவ் போல்மர் தனது Bபுளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனத்திற்காக இந்த புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்கி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்த புதிய டைட்டானிக்-2 கப்பல்…
-
சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு
SMH கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
‘புதிய நோயால்’ வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்
– S-90 இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி. குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.