லாஹூர்: அடுத்த ஐ.சி.சி உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன்போது பாகிஸ்தான் அணியின் தலைவராக 40 வயதை நெருங்கும் மிஸ்பா உல்-ஹக் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவிக்கையில்,‘டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீரர்களை திறம்பட வழிநடத்தி வரும் மிஸ்பா உல்-ஹக்கை தலைவர் பதவியில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை. இப்போது அவர் மிகவும் அனுபவம் பெற்றுவிட்டார். தனிப்பட்ட முறையில் அவரது ஓட்ட குவிப்பும் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.ஆனால், முகமது ஹபீஸ் விலகி விட்டதால் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான அணிக்கு புதிய தலைவரை நியமிக்க ஆலோசனை நடந்து வருவது உண்மை. அப்ரிடி, உமர் அக்மல், அகமது ஷேசாத் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றன.’ என்றும் சபை தெரிவித்துள்ளது.காத்திருக்கும் ஆமிர்..!ஸ்பொட் பிக்சிங் குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஆமிர், தனது கனவு நிறைவேறுமா என்ற ஆவலில் வலம்வந்து கொண்டிருக்கிறார்.பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர்(வயது 22). கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில்ஸ்பொட் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஐ.சி.சி சார்பில் இவருக்கு 5 ஆண்டு தடையும், இங்கிலாந்து நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.இச்சம்பவங்கள் நடந்த போது, ஆமிருக்கு வயது 18 என்பதால் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். இவரது தடைக்காலம் வருகிற 2015ல் தான் முடிகிறது, இதற்கிடையே 11வது உலக கிண்ணத் தொடர் 2015 பிப்ரவரி 14 முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது.எனவே சிறப்பு அனுமதி கிடைக்கவில்லை எனில், ஆமிர் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஆமிர் கூறுகையில், இந்த சிக்கலில் இருந்து கடவுள் தன்னை விடுவிப்பார் என்றும், இது நடந்துவிட்டால் அப்புறம் நான் விளையாடுவதை யாராலும் தடுக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார். LS
Published by



Leave a comment