பாலர் பாடசாலைகளின் ‘மாபெரும் ஆக்கத்திறன் கண்காட்சி- 2014’ 2ம் நாள் நிகழ்வை PMGGயின் சூறாசபை உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆரம்பித்துவைத்தார்

unnamedPMGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம சேவைப் பிரிவைச் சேர்ந்த பாலர் பாடசாலைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மாபெரும் ஆக்கத்திறன் கண்காட்சி- 2014’ யின் இரண்டாம் நாள் அங்குரார்ப்பண நிகழ்வினை காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

புதிய காத்தான்குடி-03, பாலர் பாடசாலைகளின் கட்டடத்தில் நேற்று சனிக்கிழமை (12.04.2014) காலை இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிராமக் உத்தியோகத்தரும் அஸ்-ஸஹ்றா பாலர் பாடசாலையின் தலைவருமான AL. அப்துல் அஸீஸ் தலைமை தாங்கினார்.

அத்துடன் விஷேட அதிதியாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் MTM. ஹாலித் JP அவர்களும் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக நகரசபை உறுப்பினர் SH. பிர்தௌஸ் ஆசிரியர், PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), முன்னாள் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் AGM. ஹாறூன், SMM. பஸீர் ஆசிரியர் உள்ளிட்ட உலமாக்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம சேவைப் பிரிவைச் சேர்ந்த பாலர் பாடசாலைகளான அஸ்- ஸஹ்றா பாலர் பாடசாலை, ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை ஆகிய மூன்றும் இணைந்து இந்த ஆக்கத்திறன் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான மேற்படி கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment