104 வருடங்களுக்குப்பின் மீண்டும் புறப்பட தயாராகிறது புதிய டைட்டானிக்! சுவாரஸ்ய தகவல்கள்…

unnamed (2)– S-90
 
பீஜிங்: உலக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த டைட்டானிக் கப்பலின் மாதிரியிலேயே டைட்டானிக் – 2 என்ற புதிய சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க அதிபரான கிளைவ் போல்மர் தனது Bபுளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனத்திற்காக இந்த புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்கி வருகிறார்.
 
கடந்த 2012ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில்,  இந்த புதிய டைட்டானிக்-2 கப்பல் திட்டத்தை அறிவித்தார் கிளைவ் போல்மர்.

 
புதிய டைட்டானிக் -2 கப்பல் தோற்றத்தில் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் போன்றே இருக்கும். தவிர, உள்ளலங்காரம் போன்றவையும் பழைய டைட்டானிக் கப்பலை ஒத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
unnamed (2)
 
ஆர்.எம்.எஸ் டைட்டானிக் சென்ற அதே பாதையில் வரும் 2016ம் ஆண்டில் தனது முதல் பயணத்தை டைட்டானிக் -2 ஆடம்பர கப்பல் துவங்க இருக்கிறது. 104 ஆண்டுகளுக்கு பின்னர் பழைய டைட்டானிக் கப்பல் சென்ற பாதையில் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு இந்த புதிய கப்பல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய டைட்டானிக்- 2 கப்பல் சீனாவின் சிஎஸ்சி ‘ஜின்லிங் ஷிப்யார்டி’ல் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கப்பல் கட்டும் பணிகள் துவங்கப்பட உள்ளன. மேலும்,  சீனாவில் உருவாக்கப்பட உள்ள மிகப்பெரிய பயணிகள் கப்பலாகவும் கூறப்படுகிறது. ஸ்வீடனை சேர்ந்த டில்பெர்க் டிசைன் நிறுவனம் கட்டுமான வடிவமைப்பை செய்து தர உள்ளது. Loyd நிறுவனம் கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டிசைனுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனைகளை தரும். 
unnamed (3)
 
இந்த கப்பலில் செல்ல இருக்கும் பயணிகளுக்கு பழைய டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் பிரபலமாக இருந்த டிசைனிலான ஆடைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிரவும்,  பழைய கப்பலில் கொடுத்த மதுவகைகள்தான் கொடுக்கப்பட உள்ளதாம்.
 
மேலும்,  பழைய டைட்டானிக் கப்பலுக்கு உணவு மற்றும் இதர பொருட்களை சப்ளை செய்தவர்களேயே மீண்டும் நியமிக்க Bபுளூ ஸ்டார் கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக,  பல்வேறு சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தையும், முயற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த ஆடம்பர கப்பலில் பயணிப்போருக்கு ஏராளமான வசதிகள் இருக்கும். அதேவேளை,  டிவி மற்றும் இன்டர்நெட் வசதி இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை பெறுவதற்காக வருவோரின் கவனத்தை டிவி மற்றும் இன்டர்நெட் மூலம் கெடுக்கவோ அல்லது கவனத்தை திசை திருப்பவோ விரும்பவில்லை என்று கிளைவ் பால்மர் கூறியிருக்கிறார்.
unnamed (1)
புதிய டைட்டானிக்-2 கப்பல் பழைய கப்பலின் மாதிரியாக கொண்டே கட்டப்படுகிறது. அதேவேளை,  மூன்றாம் வகுப்பு அறைகளின் டிசைனில் சில மாற்றங்களுடன் நவீனத்துவம் மிக்கதாக மாற்றுவதற்கு Bபுளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
புதிய டைட்டானிக் – 2 கப்பலில் பயணிக்க உலக அளவிலிருந்து ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருவதாக Bபுளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 40,000 பேர் கப்பலில் பயணிப்பதற்காக விசாரணை செய்துள்ளதாக Bபுளூ ஸ்டார் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 2016ம் ஆண்டு துவக்கம் வரையில் டைட்டானிக் – 2 கப்பலுக்கான பயணச் சீட்டு விற்பனை நடைபெறும்.
 
பழைய டைட்டானிக் டிக்கெட்டின் அடிப்படையிலேயே, இந்த டைட்டானிக் கப்பலுக்கான டிக்கெட் விலை தற்போதைய பண மதிப்புக்கு மாற்றப்பட்டு நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் வகுப்பு டிக்கெட் ஒரு லட்சம் டொலர் வரையிலும் மூன்றாம் வகுப்பு டிக்கெட் 57,000 டொலர் வரையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
unnamed
 
இந்த கப்பலில்  அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை Bபுளூ ஸ்டார் லைன் நிறுவனத்திற்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் கேப்டன் பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக Bபுளூ ஸ்டார் லைன் தெரிவித்துள்ளது. தற்போது பணியாளர்கள் நியமனமும் நடந்து வருகிறது.
டைட்டானிக் -2 கப்பல் பயணிகளுக்கான உணவு பட்டியலை 68 சமையல் கலைஞர்கள் அடங்கிய குழு தயாரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உணவு பொருட்கள் பழைய முறையிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதால், சமையல் கலைஞர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று Bபுளூ ஸ்டார் லைன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பழைய டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது அதில் போதிய எண்ணிக்கையில் உயிர்காக்கும் படகுகள் இல்லை.
 
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் பயணித்தோரில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைத்தனர். மூன்றாம் வகுப்பில் பயணித்த 1,500 பேர் வரை நீரில் மூழ்கி மாண்டனர். ஆனால், புதிய டைட்டானிக்-2 கப்பலில் அவசர காலத்தில் பயணிக்கும் அனைவரும் தப்பிக்கும் வகையில், போதிய எண்ணிக்கையில் உயிர்காக்கும் படகுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் ஒன்று…. ஜக்கும் ரோசும் இருக்க மாட்டார்கள்…!

Published by

Leave a comment