Author: yourkattankudy.com
-
வழிகாட்டக் கூடியவர்கள் மக்களை பிரித்து இயக்கத்திற்காக பயன்படுத்துவது இனியும் எமக்கு வேண்டாம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை தொடர்பிலும், இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் பல் வேறுபட்ட பேச்சுக்கள் நாட்டுக்குள்ளும், சர்வதேச புலம் பெயர் சமூகங்கள் மத்தியிலும் பேசப்பட்டுவருகின்றன.கடந்த பல மாதங்களாக இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் முதல் உரிமை மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும்,அவை முற்றுப் பெறாத தொடர் கதையாகத்தான் இருந்து வருகின்றது.
-
பல்கலைக்கழக மாணவியின் ‘உயிர்’ பதறப் பதற பறிக்கப்பட்ட சோகம்!
எம்பிலிப்பிட்டிய: எம்பிலிப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலிருந்து 22 வயதான பல்கழைக்கழக மாணவி ஒருவரின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
கிழக்கு மாகாண எல்லே சம்பியனானது ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகான மட்ட எல்லே போட்டி நேற்று அம்பாறையில் நடை பெற்றது. நேற்றைய இறுதிப் போட்டியில் ஏறாவுரை சேர்ந்த மாக்கான் மாக்கார் வித்தியாலயமும், ஏறாவுரை சேர்ந்த றஹுமானிய்யா வித்தியாலயமும் போட்டியிட்டன. இறுதியில் மாக்கான் மாக்கார் வித்தியாலய அணி மாகாண எல்லே சம்பியனானது. அல்ஹம்திலில்லாஹ்.
-
கலை கலாசார மேம்பாட்டு கழகத்துடனான விஷேட சந்திப்பின் போது சுஜாவின் கேள்விக்குறி குறும்பட இறுவட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் புதிய கலைப்படைப்புகளை தயாரிப்பது மற்றும் கலைஞர்களை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக காத்தான்குடி கலை கலாசார மேம்பாட்டுகழக உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று 25 ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திககுழுத் தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியது.
-
நண்பர் இலக்கிய வட்டம் வெளியிடும் வாழைச்சேனை கவிஞர் சல்மான் வஹாபின் அக்கரைப்பச்சை கவிதை நூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: நண்பர் இலக்கிய வட்டம் வெளியிடும் வாழைச்சேனை கவிஞர் சல்மான் வஹாபின் அக்கரைப்பச்சை கவிதை நூல் வெளியீட்டு விழா வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை விழா மண்டபத்தில் 25-05-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் ஒருபோதும் இடமாற்றப்படாது
கொழும்பு: கிராண்ட்பாஸ், மோலவத்தை முஸ்லிம் பள்ளிவாசல் ஒருபோதும் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படமாட்டாதென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனா நாயக்க கூறியுள்ளார்.
-
விபத்தை தடுக்க துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்
S-90 துபாய்: துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014 வரை நடைபெற இருக்கிறது என ‘அப்கிரேட் குரூப்’பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாட்டு நாணயங்களுடன் மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் கைது
– S-90 கோலாலம்பூர்: மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் அலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் செலங்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு முதல் வசித்து வந்த ஐ.நா. ஆணைய அகதிகள் அட்டை வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் மலேசிய நாட்டின் தீவிரவாத தடுப்பு படை பொலீசாரால் கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
-
கருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்
கொழும்பு: இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தரித்த நிலையிலும் குழந்தையுடனும் நாடு திரும்புவது அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது.
-
அனைத்து இந்திய மீனவர்களும் விடுவிப்பு: மஹிந்த உத்தரவு
கொழும்பு: இலங்கைச் சிறைகளில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவிக்கிறது.
-
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி வயோதிபர் பலி: வடமுனையில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இகிரான் பிரதேச செயலகபிரிவுக்குள் உள்ள வெலிகந்த பிரதேசத்துக்கு அருகாமையிலுள்ள வடமுனை பிரதேசத்தில் வசித்து வரும், வதனக்குட்டி சின்னப்பிள்ளை கங்காணம் (வயது -64) என்பவர் நேற்று மாலை கட்டிட இடிபாடுகளுக்குள் சடலமாக கிடப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.
-
திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா
ஏத்தாளை: திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.