கிழக்கு மாகாண எல்லே சம்பியனானது ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகான மட்ட எல்லே போட்டி நேற்று அம்பாறையில் நடை பெற்றது. நேற்றைய இறுதிப் போட்டியில் ஏறாவுரை சேர்ந்த மாக்கான் மாக்கார் வித்தியாலயமும், ஏறாவுரை சேர்ந்த றஹுமானிய்யா வித்தியாலயமும் போட்டியிட்டன. இறுதியில் மாக்கான் மாக்கார் வித்தியாலய அணி மாகாண எல்லே சம்பியனானது. அல்ஹம்திலில்லாஹ்.

றஹுமானிய்யா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது.

கிழக்கு மாகானத்திலேயே எல்லே போட்டியில் தங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்து ஜாம்பவான்களாக திகழும் இவ்விரு பாடசாலைகளுக்கும், அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள், போட்டியிட்ட வீரர்கள் அனைவருக்கும் வாழத்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன் என்று பிரதேச மரண விசாரணை அதிகாரியும், தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம் கடந்த வருடம் கிழக்கு மாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகி அகில இலங்கை ரீதியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரின் பிரபல விளையாட்டு, விஞ்ஞன ஆசிரியர் எம்.எம்.முஹைதீன் சேருக்கு அடுத்ததாக எல்லே விளையாட்டில் சம்பியன் அணியொன்றை உருவாக்கிய பெருமை விளையாட்டு ஆசிரியர் ஜனாப் எச்.எம்.ஏ.மாஜீத் ஆசிரியரையே சாறும் அல்ஹம்துலில்லாஹ்.

தனது அயராத முயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுத் கொடுத்த ஜனாப் எச்.எம்.எம். மாஜித் ஆசிரியர் அவர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய ஆசிரியர் ஜனாப் ஏ.எம். உபைதுல்லாஹ் அவர்களுக்கும் இதயபூர்வமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

eravur

eravur (2)

Published by

Leave a comment