கலை கலாசார மேம்பாட்டு கழகத்துடனான விஷேட சந்திப்பின் போது சுஜாவின் கேள்விக்குறி குறும்பட இறுவட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு 

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் புதிய கலைப்படைப்புகளை தயாரிப்பது மற்றும் கலைஞர்களை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக காத்தான்குடி கலை கலாசார மேம்பாட்டுகழக உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று 25 ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திககுழுத் தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது கழகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் கலை கலாச்சார நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கப்பட்டதோடு நளிந்து வரும் கலைத்துவத்திற்கு புத்துயிர் அளிப்பதன் அவசியம் சம்மந்தமாகவும் இங்கு விசேட கவணம் செலுத்தப்பட்டது.

இவ்வேளையில் கழக உறுபினர்களுடன் உரையாடிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிடுகையில் நமது பாரம்மபரியக்கலைகள் மறைந்து போவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் அயலூர்களின் பாரம்பரியக் கலைக் குழுக்கள் போன்று கோலாட்டம் ,தகரா ,கம்படி ஆகிய கலைகள் சார்ந்த விற்பன்னர்களாக நமது இளம் மாணவர்களையும் உருவாக்க வேண்டும் என இங்கு குறிப்பிட்டார்.

இதன்போது சுஜாவின் கேள்விக்கறி குறும்படம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்படதோடு கழகத்திற்கு பெறுமதி மிக்க அன்பளிப்புத்தொகை ஒன்றையும் பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இங்கு கையளித்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

Published by

Leave a comment