நண்பர் இலக்கிய வட்டம் வெளியிடும் வாழைச்சேனை கவிஞர் சல்மான் வஹாபின் அக்கரைப்பச்சை கவிதை நூல் வெளியீட்டு விழா

DSC02065– பழுலுல்லாஹ் பர்ஹான்

வாழைச்சேனை: நண்பர் இலக்கிய வட்டம் வெளியிடும் வாழைச்சேனை கவிஞர் சல்மான் வஹாபின் அக்கரைப்பச்சை கவிதை நூல் வெளியீட்டு விழா வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை விழா மண்டபத்தில் 25-05-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

பதில் கோட்டக்கல்விப் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.எஸ்.கே.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இக் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும்,இன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

இதன் போது அக்கரைப்பச்சை கவிதை நூலின் முதற்பிரதி நூலாசிரியர் கவிஞர் சல்மான் வஹாபினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் உத்தியோகபூர்மாக வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு அக்கரைப்பச்சை கவிதை நூல் விமர்சனத்தை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான் வழங்கியதோடு கருத்துரையை மருதமுனை கவிஞர் ஜமீல் வழங்கினார்.

இதில் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத்,இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பஸ் டிப்போ முகாமையாளர் அஸீஸ், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் எம்.ரி.எம்.அஷ்ரப், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ்,கவிஞர் வாழையூர் இஸ்மாயில், கவிஞர் நளீம் ,உட்பட கவிஞர்கள்,ஊடகவியலாளர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

குறிப்பு அக்கரைப்பச்சை கவிதை நூலில் வெளியீட்டுள்ள அணைத்து கவிதைகளும் ஆசிரிய ஆலோசகர் கவிஞர் சல்மான் வஹாபினால் எழுதப்பட்டு தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC02065

DSC02067

DSC02075

Published by

Leave a comment